ஈஷா மகா சிவராத்திரி நிகழ்ச்சிக்கு சிக்கல்... உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!

ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா
ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா

கோவை ஈஷா அறக்கட்டளை வளாகத்தில் இருந்து சிவராத்திரியன்று விவசாய நிலங்களில் கழிவு நீர் கலக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை செம்மேடு அருகே உள்ள பூண்டி ஆண்டவர் திருக்கோயிலின் அருகே ஈஷா யோகா மையம் அமைந்துள்ளது. இந்த மையத்தில் வருகிற 8ம் தேதி மகா சிவராத்திரி விழா நடைபெற உள்ளது. இதில் குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் உள்ளிட்ட முக்கிய விருந்தினர்கள் பங்கேற்க உள்ளனர். இதையடுத்து இந்நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மட்டுமின்றி, வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதியோகி சிலை
ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதியோகி சிலை

முக்கிய விருந்தினர்கள் மற்றும் சிவராத்திரி விழாவிற்கு வருகை தரும் மக்களை இரவு முழுவதும் மகிழ்விக்க பிரம்மாண்ட இசைநிகழ்ச்சிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சிகளின் போது ஒலி, ஒளி மாசு ஏற்படுவதாகவும், மையத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அருகில் உள்ள வேளாண் நிலங்களில் சுத்தீகரிக்கப்படாமல் கொட்டப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக கோவை செம்மேடு கிராமத்தைச் சேர்ந்த சிவஞானம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜரானார். ”சிவராத்திரி நாட்களில் பல லட்சக்கணக்கான மக்கள் குவிவதால் ஒலி ஒளி மாசு காரணமாக யானைகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. சிவராத்திரி நாட்களை தூங்காமல் இருப்பது அவர்கள் உரிமை. ஆனால் யானைகள் ஏன் தூங்காமல் இருக்க வேண்டும்?” என வாதிட்டார். அப்போது நீதிபதிகள், மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்ததா என கேள்வி எழுப்பினர்.

மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்ய தயாராக இருப்பதாக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜே.ரவீந்திரன் பதில் அளித்தார். இதையடுத்து ஈஷா யோக மையத்திலிருந்து அருகே உள்ள நிலங்களில் சுத்திகரிக்கப்படாமல் கழிவுநீர் திறந்து விடப்படுகிறதா என ஆய்வு செய்யுமாறு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இந்த மனு குறித்து ஈஷா யோக மையமும், தமிழக அரசும் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை வருகிற 27ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் வாசிக்கலாமே...

ஷாக்... பிறந்த நாள் கொண்டாட காதலி வீட்டிற்கு சென்ற காதலன் அடித்துக் கொலை!

மருத்துவர்களின் 12 மணி நேர போராட்டத்தால் பெயிண்டருக்கு மீண்டும் கிடைத்த வாழ்க்'கை'

நான்கு மாநில விருதுகள்... பிரபல கதாசிரியர் மாரடைப்பால் திடீர் மரணம்!

நன்றி மறந்தாரா யுவன்?! சர்சையைக் கிளப்பும் ‘தென்மாவட்டம்’!

அடுத்தடுத்து வெளியாகும் ஆபாச புகைப்படங்கள்... 'வில்லேஜ் புட் பேக்டரி' க்கு வந்த சோதனை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in