ஊட்டியில் திரைப்பட நகரம், ஐடி பார்க், தேயிலைக்கு ஆதாரவிலை... நீலகிரிக்கு தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் எல்.முருகன்!

தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் எல்.முருகன்
தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் எல்.முருகன்

நீலகிரி மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை பாஜக வேட்பாளர் எல்.முருகன் வெளியிட்டார். மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு இரட்டை ரயில் பாதை கொண்டு வர நடவடிக்கை எடுப்போம். ஊட்டியில் உலக தரம் வாய்ந்த படப்பிடிப்பு தளம் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

நீலகிரி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் எல்.முருகன் போட்டியிடுகிறார். அவர் மக்களிடையே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு ஆதரவாக கூட்டணி கட்சி தலைவர்களும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நீலகிரி தொகுதிக்கான தனது தேர்தல் அறிக்கையை, ஊட்டி பாஜக அலுவலகத்தில் வைத்து இன்று எல்.முருகன் வெளியிட்டார். அதில், 'நீலகிரியில் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், உலக தரத்தில் சுற்றுலா மையம் மற்றும் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும். ஊட்டியில் சர்வதேச நிறுவனங்களின் ஆராய்ச்சி மையம் மற்றும் மேம்பாடு மையம் கொண்டு வரப்படும். ஊட்டியில் உலக தரம் வாய்ந்த படப்பிடிப்பு தளம், போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளுக்கான திரைப்பட நகரம் அமைக்கப்படும்.

தேர்தல் பிரச்சாரம்
தேர்தல் பிரச்சாரம்

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள எச்.பி.எப்., தொழிற்சாலை நவீனமயமாக்கப்பட்டு, புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா கொண்டு வரப்பட்டு, வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். ஊட்டி காந்தலில் விளையாட்டு மைதானம் அமைக்கப்படும். மின் இணைப்பு இல்லாத குடியிருப்புகளுக்கும் மின் இணைப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜல் ஜீவன் திட்டத்தில் ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் வசதி கொண்டு செல்ல முயற்சி எடுப்போம். மேட்டுப்பாளையத்தில் மிகப்பெரும் இடையூறாக உள்ள போக்குவரத்து நெரிசலுக்கு, வெளி வட்ட சாலை அமைத்து தீர்வு காணப்படும். அவினாசி முதல் மேட்டுப்பாளையம் வரையிலான சாலை விரிவாக்க பணிகளும், மேட்டுப்பாளையத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புறவழிச்சாலை அமைப்பதற்கான பணிகளும் உடனடியாக தொடங்கப்படும்.

நீலகிரி தொகுதி தேர்தல் அறிக்கை
நீலகிரி தொகுதி தேர்தல் அறிக்கை

மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு இரட்டை ரயில் பாதை கொண்டு வர நடவடிக்கை எடுப்போம். நிலாம்பூர் முதல் நஞ்சன் கோடு வரை கூடலூர் வழியாக புதிய ரயில் பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சாம்ராஜ் நகர் முதல் ஈரோடு வரையிலான ரயில்வே திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். மருத்துவ ஆராய்ச்சிகளுக்கான ஒருங்கிணைந்த மையம் நிறுவப்படும்.

ஊட்டியில் சுற்றுலா வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு வசதியாக மல்டி லெவல் பார்க்கிங் வசதி அமைக்கப்படும். தேயிலைக்கு ஆதார விலை, அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் விடுபட்ட குளம், குட்டைகள் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை சேமித்து வைக்கும் வகையில் அரசு குளிர்ப் பதன கிடங்குகள் அதிக இடங்களில் அமைத்து தரப்படும். நீலகிரி மாவட்டத்தின் பிரதான பயிரான பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்பட்டு, தேயிலை விவசாயிகளின் துயர் துடைக்கப்படும்’ என்பன உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

இதையும் வாசிக்கலாமே...   

அடேங்கப்பா ரூ.4,650 கோடி பறிமுதல்... முதற்கட்ட தேர்தலுக்கு முன்பே அதிரடி காட்டிய தேர்தல் ஆணையம்!

அதிர்ச்சி... அம்பேத்கர் ஜெயந்தி ஊர்வலத்தில் பங்கேற்ற இளைஞர் வெட்டிக்கொலை!

பிரதமர் மோடியை பார்க்கச் சென்றவர் உயிரிழப்பு... பாதுகாப்புக்காக கட்டப்பட்டிருந்த கயிற்றில் சிக்கி பலி!

டயர் வெடித்து தலைகீழாக கவிழ்ந்த மணல் லாரி... மணலில் புதைந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியான சோகம்!

ஒபாமாவே அஞ்சு வருஷம் தான்... இடத்தை காலி பண்ணுங்க மோடி... முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் ஆவேசம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in