அமர்பிரசாத் ரெட்டியின் முன் ஜாமீன் வழக்கு... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அமர்பிரசாத் ரெட்டி
அமர்பிரசாத் ரெட்டி

பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்த சென்னை உயர் நீதிமன்றம், அதுவரை அவருக்கு இடைக்கால நிவாரணம் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.

உயர் நீதிமன்றம்
உயர் நீதிமன்றம்

பாஜக பெண் நிர்வாகியை வீடு புகுந்து தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரில் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி, அவரது கார் ஓட்டுநர் ஸ்ரீதர் உள்ளிட்ட 4 பேர் மீது கோட்டூர்புரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வன்கொடுமை தடுப்புச் சட்டம், அத்துமீறி உள்ளே புகுந்து தாக்குதல், காயப்படுத்துதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன. அமர் பிரசாத் ரெட்டியை கைது செய்வதற்காகத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ள நிலையில் முன்ஜாமீன் கோரி அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அமர்பிரசாத் ரெட்டி
அமர்பிரசாத் ரெட்டி

அதில், அரசியல் உள்நோக்கத்துடன் பழிவாங்கும் நடவடிக்கையாக தன் மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனக்கு எதிரான புகார் குறித்து முறையாக விசாரணை நடத்தாமல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மற்றொரு நபரும் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாகவும், ஆனால் அது விசாரணைக்குப் பட்டியலிடப்படவில்லை எனவும் காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறினார்.

அமர்பிரசாத் ரெட்டி
அமர்பிரசாத் ரெட்டி

இதனையடுத்து, அந்த மனுவுடன் சேர்த்து அமர் பிரசாத் ரெட்டியின் மனுவும் விசாரிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார். அவ்வாறு ஒத்திவைக்கப்படுவதாக இருந்தால் அதுவரை கைது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது என உத்தரவிட வேண்டுமென அமர் பிரசாத் ரெட்டி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பால் கனகராஜ் கோரிக்கை விடுத்தார். மேலும், இது ஒரு பொய் வழக்கு என்றும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் மனுதாரரால் அன்றாட பணிகளைக் கூட மேற்கொள்ளக் கூட முடியவில்லை எனவும் தெரிவித்தார். ஆனால், இடைக்கால நிவாரணம் வழங்க மறுத்த நீதிபதி வழக்கின் விசாரணையைப் புதன்கிழமைக்கு ஒத்திவைத்தார்.

இதையும் வாசிக்கலாமே...

ஸ்ரீதேவி மரணத்தில் மர்மம்... பிரதமர் பெயரில் போலி கடிதம் தயாரித்த இளம்பெண்!

'லால் சலாம்' படத்தை வெளியிட தடை!?

கட்சியைக் கைப்பற்ற சாட்டை துரைமுருகன் திட்டம்... என்ஐஏ சோதனையில் வெளியான அதிர்ச்சி!

நடிகர் விஜயால் இத்தனை கோடி நஷ்டமா?: தீயாய் பரவும் தகவல்!

நடிகை ஜெயலட்சுமிக்கு கொலைமிரட்டல்... போலீஸில் பரபரப்பு புகார்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in