விருதுநகர் அருகே 16 கிலோ தங்க நகைகள் பறிமுதல்... தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி!

பறிமுதல் செய்யப்பட்ட தங்கம்
பறிமுதல் செய்யப்பட்ட தங்கம்

விருதுநகர் அருகே ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 16 கிலோ தங்க நகைகளை தேர்தல் பறக்கும்படை அலுவலர்கள் இன்று பறிமுதல் செய்து, வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

ஆவணமின்றி தங்கம் கொண்டுவரப்பட்ட வாகனம்.
ஆவணமின்றி தங்கம் கொண்டுவரப்பட்ட வாகனம்.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள், சரக்கு வாகனங்கள், கார்கள் மற்றும் பல்வேறு வாகனங்களை ஆங்காங்கே வழிமறித்து அதிக அளவில் பணம், பரிசு பொருள்கள் கொண்டு செல்லப்படுகிறதா என்பது குறித்து சோதனை நடத்தி வருகின்றனர். அதிக அளவில் பொதுமக்கள் பணத்தை கொண்டு செல்லும்போது அதற்குரிய ஆவணங்களை காண்பித்தால் விடுவித்து விடுகின்றனர். ஆவணங்கள் இல்லாத பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து அரசு கருவூலத்தில் சேர்த்து வருகின்றனர்.

விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகம்
விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகம்

இந்நிலையில் விருதுநகர் மாவட்டம், சந்திரரெட்டியாபட்டி சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும்படை அலுவலர்கள் வாகனச்சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வாகனத்தை வழிமறித்து சோதனையிட்டதில் 16 கிலோ தங்கம் இருந்ததும், அதற்குரிய ஆவணங்கள் இல்லாததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த தங்கத்தை பறிமுதல் செய்து பறக்கும் படை அலுவலர்கள் விசாரணை நடத்தினர்.

இதில், கொரியரில் 3 தனித்தனி பார்சல்களாக மதுரையிலிருந்து நாகர்கோவிலுக்கு பல்வேறு நகைக்கடைகளுக்கு விநியோகம் செய்ய இருந்ததும் தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட நகைகளின் மதிப்பு சுமார் ரூ.8.5 கோடி என தெரிவித்துள்ளனர். இதையடுத்து அந்த நகைகளை விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பறக்கும்படை அலுவலர்கள் ஒப்படைத்தனர்.

இதையும் வாசிக்கலாமே...    

‘என்னது... நாடு தீப்பற்றி எரியுமா? இதுதான் ஜனநாயகத்தின் மொழியா?’ ராகுலுக்கு எதிராக குமுறும் மோடி

வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் ஸ்டாலின்... மு.க.அழகிரியின் மகன் உடல்நிலை பற்றி விசாரித்தார்!

முதல்வர் மாற்றம்... கேஜ்ரிவால் இல்லத்தில் குவியும் ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்கள்!

‘காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமிக்க காரணம் நேரு’ அமித் ஷா அடுத்த அட்டாக்

காதல் வலையில் சிக்கிய ஷாருக்கான் மகன்... பிரேசிலியன் நடிகையுடன் காதலா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in