மகளிர் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் : மும்பை- குஜராத் அணிகள் இன்று மோதல்!

மகளிர்  ப்ரீமியர் லீக் கிரிக்கெட் : மும்பை- குஜராத் அணிகள் இன்று மோதல்!

மகளிருக்கான பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் இன்று குஜராத் அணியை சந்திக்கிறது மும்பை இண்டியன்ஸ் அணி.

மகளிருக்கான பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 5 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்குள் நுழையும்.

குஜராத், மும்பை அணிகளின் கேப்டன்கள்
குஜராத், மும்பை அணிகளின் கேப்டன்கள்

இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ் அணியை சந்திக்கிறது. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் மும்பை அணி 6 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றியும், 2 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளன. இதன் மூலம் 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் மும்பை அணி இரண்டாவது இடத்தில் உள்ளது.

அதேபோன்று 5 போட்டிகளில் விளையாடியுள்ள குஜராத் அணி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று 4 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. இதன் மூலம் 2 புள்ளியுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்த இரு அணிகளும் ஏற்கனவே மோதிய லீக் ஆட்டத்தில் மும்பை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. எனவே ஏற்கனவே மும்பை அணியிடம் தோல்வி அடைந்ததால் அதற்கு பதிலடி கொடுக்க குஜராத் கடுமையாக முயற்சிக்கும் என்பதால் இன்று நடைபெறும் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது.

இதையும் வாசிக்கலாமே...


நேருவின் சாதனையை சமன் செய்வாரா... நீண்டகால பிரதமர்கள் வரிசையில் முன்னேறும் மோடி!

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் அஜித்... 'தல' ரசிகர்கள் உற்சாகம்!

‘கருப்பர் தேசம்’ யூடியூப் சேனலுக்கு 1 கோடியே 1,000 ரூபாய் அபராதம்... உயர்நீதிமன்றம் உத்தரவு!

படிக்கும் வயதில் காதல்... பாதியில் முடிந்த வாழ்க்கை... 10-ம் வகுப்பு மாணவி காதலனுடன் தற்கொலை!

பிரதமர் மோடி யானை சவாரி... அசாம் மாநிலத்தில் 2 நாள் சுற்றுப்பயணம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in