புனே ரசிகர் வித்தியாச ஸ்டேட்மென்ட்
புனே ரசிகர் வித்தியாச ஸ்டேட்மென்ட்

ரோகித் சர்மா உலகக்கோப்பையை ஏந்தும் வரை தோழியுடன் டேட்டிங் இல்லை! அதிரவைக்கும் புனே ரசிகரின் அறிவிப்பு

இந்தியா - வங்கதேசம் இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி புனே மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 256 ரன் எடுத்தது.

புனே ரசிகர் வித்தியாச ஸ்டேட்மெண்ட்
புனே ரசிகர் வித்தியாச ஸ்டேட்மெண்ட்

இந்த போட்டியை காண புனே நகரம் மட்டுமல்லாது, மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ரசிகர்கள் மைதானத்தில் குவிந்துள்ளனர். ஆட்டத்திற்கு முன்பாக நீல நிற உடையுடன் மைதானத்திற்கு வெளியே உற்சாகமாக குவிந்திருந்த ரசிகர்களில் ஒருவர், ரோகித் சர்மா உலகக் கோப்பையை கையில் ஏந்தும் வரை தான் டேட்டிங் செய்யப்போவதில்லை என்ற வாசகம் அடங்கிய பதாகையை ஏந்தியிருந்தார்.

பலரது கவனத்தையும் ஈர்த்த அவர், இம்முறை இந்தியா உலகக் கோப்பையை வெல்லப்போவது உறுதி என்றும் அதுவரை தான் தோழியுடன் டேட்டிங் செய்யப்போவதில்லை என்றும் கூறினார். மேலும், இன்றைய போட்டியில் வங்கதேசத்துடனான போட்டியில் வெல்லப்போவதும் உறுதி என்றும் கூறி உற்சாகத்தை வெளிப்படுத்தினார். இந்த ரசிகரின் வித்தியாச அறிவிப்பு இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

x
காமதேனு
kamadenu.hindutamil.in