அரையிறுதி வாய்ப்பை தக்க வைக்குமா பாகிஸ்தான்? தென்னாப்பிரிக்காவுடன் இன்று மோதல்!

தென்னாப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகள் மோதல்
தென்னாப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகள் மோதல்

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் மிக முக்கியமான ஆட்டத்தில் பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் 26வது லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இன்றைய போட்டியில் தோல்வியடைந்தால் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கான வாய்ப்பை மொத்தமாக இழந்து லீக் சுற்றுடன் வெளியேறும். அதே நேரம் இன்றைய போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் தென்னாப்பிரிக்க அணிக்கான அரையிறுதிக்கான வாய்ப்பு பிரகாசமாகும்.

தென்னாப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகள் மோதல்
தென்னாப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகள் மோதல்

இதனால், இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும். இந்த உலகக் கோப்பை தொடர்களிலேயே பேட்டிங்கில் சிறப்பாக அசத்தி வரும் ஒரே அணியாக தென்னாப்பிரிக்கா உள்ளது. அந்த அணி இதுவரை 3 முறை 350 ரன்னை கடந்து சாதனை படைத்துள்ளது. பாகிஸ்தான் அணியோ கடைசியாக விளையாடிய 3 போட்டிகளிலும் படுதோல்வியை சந்தித்துள்ளது. அதிலும் ஆப்கானிஸ்தானுடனான தோல்வி அந்த அணி வீரர்களை மனதளவில் பாதித்துள்ளது. அதில் இருந்து மீண்டு தென்னாப்பிரிக்காவிற்கு கடும் நெருக்கடி கொடுப்பார்களா என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர். புள்ளிப்பட்டியலில் தென்னாப்பிரிக்கா 2ம் இடத்திலும், பாகிஸ்தான் 6வது இடத்திலும் உள்ளன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in