‘விரைவில் சந்திப்போம்’... பாராட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ்; எச்சரித்த பஞ்சாப் அணி!

சென்னை பஞ்சாப் அணி
சென்னை பஞ்சாப் அணி

நேற்றைய போட்டியில் 262 ரன்கள் எனும் இமாலய இலக்கை எட்டிய பஞ்சாப் அணியை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பாராட்டியது. ஆனால் இதற்கு பதிலளித்த பஞ்சாப் அணி ‘ விரைவில் சந்திப்போம்’ என எச்சரிக்கும் வகையில் பதிவிட்டுள்ளது.

டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக 262 ரன்கள் இலக்கை சேஸ் செய்து பஞ்சாப் அணி நேற்று புதிய வரலாறு படைத்துள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 261 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய பஞ்சாப் அணி வெறும் 18.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 262 ரன்களை எடுத்து சாதனை படைத்துள்ளது. இந்தப் போட்டியில் பஞ்சாப் அணியின் பேர்ஸ்டோவ் 48 பந்துகளில் 108 ரன்களும், இளம் வீரர் ஷஷாங்க் சிங் 28 பந்துகளில் 68 ரன்களும் விளாசினர்.

இந்த போட்டியில் இரு அணிகளும் இணைந்து மொத்தமாக 523 ரன்களையும் குவித்துள்ளது. அதேபோல் கொல்கத்தா அணி தரப்பில் 18 சிக்சர்களும், பஞ்சாப் தரப்பில் 24 சிக்சர்களும் என்று மொத்தமாக 42 சிக்சர்களும் விளாசப்பட்டுள்ளது.

இப்போட்டியின் வாயிலாக ஐபிஎல் தொடரில் அதிகபட்ச இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்த அணி என்ற மாபெரும் சாதனையை பஞ்சாப் படைத்தது. அத்துடன் ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் அதிகபட்ச இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்த அணி என்ற தென்னாப்பிரிக்காவின் சாதனையையும் உடைத்து பஞ்சாப் புதிய உலக சாதனை படைத்தது.

அதைப் பார்த்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுடைய டிவிட்டர் பக்கத்தில் “523 ரன்கள். 42 சிக்ஸர்கள். இது உலகிற்கு வெளியே நடந்த அற்புதமான போட்டி” என்று பஞ்சாப் அணியை பாராட்டியுள்ளது. ‘முதல்வன்’ திரைப்படத்தில் “இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே” என்று நடிகர் மணிவண்ணன் சொல்லும் புகைப்பட மீம்ஸை பதிவிட்டு பஞ்சாப் அணியை சிஎஸ்கே பாராட்டியிருந்தது.

அதைப் பார்த்த பஞ்சாப் அணி “விரைவில் சந்திப்போம்” என்ற தலைப்புடன் பதிவிட்டு சிஎஸ்கே அணிக்கு பதிலளித்துள்ளது. குறிப்பாக அதே முதல்வன் படத்தில் மக்கள் அனைவரும் நீங்கள் முதல்வராக வரவேண்டும் என்று கேட்டுக்கொண்ட பின் கையை உயர்த்தும் நடிகர் அர்ஜுனின் புகைப்படத்தை பதிவிட்டு பஞ்சாப் பதிலளித்துள்ளது. விரைவில் மே 1 மற்றும் மே 5 ஆகிய 2 தேதிகளில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோத உள்ளன. இதற்காக சென்னை அணியை எச்சரிக்கும் விதமாக பஞ்சாப் அணி இப்படி பதிவிட்டுள்ளதா என்று சிஎஸ்கே ரசிகர்கள் கோபமடைந்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

ஹாட்ரிக் வெற்றி... உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் இந்தியாவுக்கு மூன்று தங்கப் பதக்கங்கள்!

700 ஹெக்டேர் நாசம்; நைனிடால் நகரை நெருங்கியது காட்டுத் தீ: இந்திய ராணுவம் விரைந்தது!

ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுக்கி 8 வயது சிறுமி மரணம்... வீட்டில் தனியாக இருந்தபோது விபரீதம்

ஆமாம்... தமிழ் சினிமாவில் கட்டப்பஞ்சாயத்து இருக்கிறது... இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேட்டி!

தனியார் கம்பெனியின் ஆசிட் தொட்டியில் விழுந்து தொழிலாளி மரணம்... சென்னை அருகே சோகம்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in