ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிகமுறை டக் அவுட்டான வீரர்.... ரோகித் ஷர்மாவின் மோசமான சாதனை!

ரோகித் ஷர்மா
ரோகித் ஷர்மா

ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர் என்ற மோசமான சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் ஷர்மா ஏற்படுத்தியுள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இன்றையப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட் செய்து வருகிறது. இப்போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரோகித் ஷர்மா, ட்ரெண்ட் போல்ட் வீசிய முதல் பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். இதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் 17 ஆவது முறையாக ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்துள்ளார் ரோகித் ஷர்மா.

தற்போது இந்த மோசமான சாதனையை ரோகித் ஷர்மாவும், தினேஷ் கார்த்திக்கும் பகிர்ந்துள்ளனர். இதேபோன்று கிளென் மேக்ஸ்வெல், பியூஷ் சாவ்லா, மன்தீப் சிங், சுனில் நரேன் ஆகியோர் தலா 15 முறை ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து இந்த பட்டியலில் 2 ஆம் இடத்தில் உள்ளனர்.

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளது ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி. எனவே இந்த தனது சொந்த மைதானத்தில் வெற்றிக் கணக்கை தொடங்கவேண்டும் என்ற முனைப்போடு ஆடிவருகின்றனர். ரோகித் ஷர்மாவைப்போலவே இந்த ஆட்டத்தில் நமன் திர், டெவால்டு ப்ரெவிஸ் ஆகியோரும் போல்ட் பந்தில் டக் அவுட் ஆனார்கள்.

இதையும் வாசிக்கலாமே...    

நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது வழக்கு... கொலை மிரட்டல் விடுத்ததாக புகார்!

பரபரப்பு... பாஜக எம்எல்ஏவை கத்தியால் குத்திக் கொல்ல முயற்சி!

அதிர்ச்சி... அருணாச்சலப் பிரதேசத்தின் 30 இடங்களின் பெயரை மாற்றி அறிவித்தது சீனா!

கிளாமர் ஒன்றும் கீழ்த்தரம் இல்லை; கொண்டாட்டம் தான்... மனம் திறந்த தமன்னா!

நடத்தையில் சந்தேகம்... மனைவி, 2 குழந்தைகளைக் கொன்று 3 நாட்களாக சடலங்களுடன் வசித்த வாலிபர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in