பரபரப்பு... பாஜக எம்எல்ஏவை கத்தியால் குத்திக் கொல்ல முயற்சி!

ராய்ச்சூர் பாஜக சட்டமன்ற உறுப்பினர் சிவராஜ் பாட்டீல்
ராய்ச்சூர் பாஜக சட்டமன்ற உறுப்பினர் சிவராஜ் பாட்டீல்

ராய்ச்சூரில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் சிவராஜ் பாட்டீலை மர்மநபர் கத்தியால் குத்திக்கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தபாஷா. அடுத்தபடம்: பாஜக சட்டமன்ற உறுப்பினர் சிவராஜ் பாட்டீல்
கைது செய்யப்பட்ட சந்தபாஷா. அடுத்தபடம்: பாஜக சட்டமன்ற உறுப்பினர் சிவராஜ் பாட்டீல்

கர்நாடகா மாநிலம், ராய்ச்சூர் நகர பாஜக சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் சிவராஜ் பாட்டீல். இவர் ராய்ச்சூரில் உள்ள கட்வால் சாலையில் நடந்த நிகழ்ச்சிக்கு இன்று சென்றிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர், திடீரென சட்டமன்ற உறுப்பினர் சிவராஜ் பாட்டீலை கத்தியால் குத்த முயன்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக, அந்த நபரை பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

அப்போது அவர் பெயர், சந்தபாஷா என்பது தெரிய வந்தது. குடிப்பழக்கத்திற்கு அடிமையான சந்தபாஷா, சட்டமன்ற உறுப்பினர் சிவராஜ் பாட்டீலை திட்டி கத்தியால் தக்க முயன்றது விசாரணையில் தெரிய வந்தது. இதுகுறித்து மார்க்கெட் யார்டு காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து சட்டமன்ற உறுப்பினர் சிவராஜ் பாட்டீல் கூறுகையில், " சந்தபாஷா குடிப்பழக்கம் உள்ளவர் என்று தெரிய வந்துள்ளது. குடிபோதையில் அவர் குழந்தைகள் மற்றும் குழந்தைகளை அடிக்கடி சித்ரவதை செய்ததாகவும் தெரிய வந்துள்ளது. அவர் என்னைத் தாக்க நடந்ததன் பின்னணியில் சதி இருந்ததாக தெரியவில்லை. இந்த சம்பவத்திற்கும், அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்றார்.

பட்டப்பகலில் சட்டமன்ற உறுப்பினரை ஒருவர் கத்தியால் குத்திக்கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்படும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் வாசிக்கலாமே...    

வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்தது... மாதத்தின் முதல் நாளில் மகிழ்ச்சி!

வருமான வரி செலுத்துவோர் கவனத்திற்கு... புதிய நிதி ஆண்டு இன்று தொடக்கம்!

தமிழக பாஜக அலுவலகம் குற்றவாளிகளின் சரணாலயம்... அமைச்சர் மனோ தங்கராஜ் தாக்குதல்!

பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம்... ஏப்ரல் 9-ம் தேதி சென்னை வருகிறார்!

ஒரே நேரத்தில் ஏவப்பட்ட 23 செயற்கைக்கோள்கள்... ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சாதனை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in