ஐபிஎல் வரலாற்றில் அசாத்திய சாதனை; 10 பந்துகளில் அரைசதத்திலிருந்து சதத்தைக் கடந்த ஆர்சிபி வீரர்!

41 பந்துகளில் சதமடித்து அசத்திய ஆர்சிபி வீரர் வில் ஜேக்ஸ்
41 பந்துகளில் சதமடித்து அசத்திய ஆர்சிபி வீரர் வில் ஜேக்ஸ்

ஐபிஎல் வரலாற்றிலேயே முதல்முறையாக குறைந்த பந்துகளில் அரை சதத்தில் இருந்து சதம் கடந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வில் ஜேக்ஸ் அசத்தல் சாதனை படைத்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் சீசனின் 45 வது லீக் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தினர். டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணியின் சாய் சுதர்சன் 84 ரன்களும், ஷாருக்கான் 58 ரன்களும், டேவிட் மில்லர் 24 ரன்களும் எடுத்தனர். பெங்களூர் அணி தரப்பில் சிராஜ், சோப்னில் சிங் மேக்ஸ்வெல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தனர்.

10 பந்துகளில் அரை சதத்தில் இருந்து சதம் கடந்து அசத்திய வில் ஜேக்ஸ்
10 பந்துகளில் அரை சதத்தில் இருந்து சதம் கடந்து அசத்திய வில் ஜேக்ஸ்

201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது. கேப்டன் டூபிளஸ்சி 12 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அதன் பின்னர் வந்த வில் ஜேக்ஸ் மற்றும் விராட் கோலி ஆகியோர் பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தனர். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த விராட் கோலி 44 பந்துகளில் 70 ரன்கள் விளாசினார். மற்றொருபுறம் துவக்கம் முதலே அதிரடி காட்டிய வில் ஜேக்ஸ் 31வது பந்தில் தனது அரை சதத்தை கடந்தார். அதன் பின்னர் அடுத்த பத்தே பந்துகளில் ஐம்பது ரன்களை விலாசி ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை ஒன்றை படைத்தார்.

வில் ஜேக்ஸ் மற்றும் விராட் கோலி
வில் ஜேக்ஸ் மற்றும் விராட் கோலி

இதற்கு முன்பாக அரை சதத்தில் இருந்து சதம் கடக்க குறைந்த பந்துகள் எடுத்துக் கொண்டவர்கள் பட்டியலில் கிரிஸ் கெயில் 13 பந்துகளுடன் முதலிடத்திலும், விராட் கோலி 14 பந்துகளுடன் 2ம் இடத்திலும் உள்ளனர். குறிப்பாக ரஷீத் கான் வீசிய 16 வது ஓவரில், 4 சித்தர்கள் ஒரு பவுண்டரி என மொத்தம் 28 ரன்களை ஜேக்ஸ் மட்டுமே அடித்து அசத்தினார். இதன் மூலம் அந்த அணி 16வது ஓவர் முடிவிலேயே வெற்றிக்கு தேவையான 206 ரகளை எடுத்து வெற்றி பெற்றது. 100 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமல்லாமல் இருந்த வில் ஜேக்ஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இதையும் வாசிக்கலாமே...


ஓரம்போ... ஓரம்போ... மத்திய அமைச்சர் வண்டி வருது... டூவீலரில் வாக்குசேகரிக்கும் ஸ்மிருதி இரானி!

தேர்தல் நேரத்தில் திடீர் அதிர்ச்சி... பாஜக எம்.பி காலமானார்!

தேவகவுடாவுக்கு முற்றும் சிக்கல்; பேரனைத் தொடர்ந்து மகன் மீதும் பாலியல் வழக்குப்பதிவு!

அடுத்த அதிர்ச்சி... ஈரோடு ஸ்டிராங் ரூமில் கேமிரா பழுது; வாக்கு எண்ணிக்கை என்னாகும்?!

பயங்கரம்... கழுத்தை அறுத்து சித்த மருத்துவர், அவரது மனைவி கொடூரக் கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in