தேர்தல் நேரத்தில் திடீர் அதிர்ச்சி... பாஜக எம்.பி காலமானார்!

வி.ஸ்ரீநிவாஸ் பிரசாத்
வி.ஸ்ரீநிவாஸ் பிரசாத்

கர்நாடகா மாநிலம், சாம்ராஜ் நகர் தொகுதி பாஜக எம்பி-யும், முன்னாள் மத்திய அமைச்சருமான வி.ஸ்ரீநிவாஸ் பிரசாத் உடல் நல குறைவால் இன்று அதிகாலை காலமானார்.

கர்நாடகா மாநிலம், சாம்ராஜ் நகர் தொகுதி பாஜக எம்பி-யும், முன்னாள் மத்திய அமைச்சருமானவர் வி.ஸ்ரீநிவாஸ் பிரசாத் (76). கடந்த சில நாள்களாக உடல்நலக் குறைவு காரணமாக ஸ்ரீநிவாஸ் பிரசாத், பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் இன்று அதிகாலை 1.27 மணிக்கு உயிரிழந்தார். வி.ஸ்ரீநிவாஸ் பிரசாத், 50 ஆண்டு கால அரசியல் பயணத்திலிருந்து கடந்த மார்ச் 17-ம் தேதி தனது ஓய்வை அறிவித்தார். இருப்பினும் மக்களவைத் தேர்தல் நடைபெறும் நிலையில் மைசூருவின் ஜெயலட்சுமிபுரத்தில் உள்ள அவரது இல்லம் எப்பாேதும் அரசியல் நடவடிக்கைகளால் பரபரப்பாகவே இருந்தது.

ஸ்ரீநிவாஸ் பிரசாத்தை அண்மையில் சந்தித்து ஆதரவு கோரிய கர்நாடகா முதல்வர் சித்தராமையா (கோப்பு படம்)
ஸ்ரீநிவாஸ் பிரசாத்தை அண்மையில் சந்தித்து ஆதரவு கோரிய கர்நாடகா முதல்வர் சித்தராமையா (கோப்பு படம்)

அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா, முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா உள்ளிட்ட காங்கிரஸ், பாஜக தலைவர்கள் பலர் ஸ்ரீநிவாஸ் பிரசாத்தை சந்தித்து ஆதரவு கோரினர். ஸ்ரீநிவாஸ் பிரசாத், 1947-ம் ஆண்டு ஜூலை 6ம் தேதி மைசூருவின் அசோகபுரத்தில் பிறந்தவர். இவரது பெற்றோர் எம் வெங்கடையா - டி. வி. புட்டம்மா. 1974-ம் ஆண்டு மார்ச் 17-ம் தேதி கிருஷ்ணராஜா சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் சுயேச்சையாக தேர்தல் அரசியலில் நுழைந்தார்.

சிறு வயது முதல் 1972 வரை ஆர்எஸ்எஸ் தன்னார்வலராக இருந்த அவர், ஜனசங்கம், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தில் தீவிரமாக இருந்தார். தலித் தலைவர், அரசியல்வாதி, தீவிர வாசிப்பு ஆர்வமுடையவர், அறிவுதளம் ஆகியவற்றில் ஸ்ரீநிவாஸ் பிரசாத் நன்கு அறியப்பட்டவர். இவர் 14 தேர்தல்களில் போட்டியிட்டு, அவற்றில் 8-ல் வெற்றி பெற்றுள்ளார். சாம்ராஜ் நகர் தொகுதியில் 9 மக்களவைத் தேர்தல்களில் போட்டியிட்டு 6 முறை வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்ராஜ் நகர் தொகுதி ஸ்ரீநிவாஸ் பிரசாத் (இடது)
சாம்ராஜ் நகர் தொகுதி ஸ்ரீநிவாஸ் பிரசாத் (இடது)

1999 முதல் 2004 வரை வாஜ்பாய் அமைச்சரவையில் மத்திய அமைச்சராக பணியாற்றினார். இரண்டு முறை எம்எல்ஏ-வாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு கர்நாடகாவின் வருவாய்த் துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். 1980-ம் ஆண்டில் ஜனதா கட்சி உறுப்பினராக தனது மக்களவை பயணத்தைத் தொடங்கிய அவர், காங்கிரஸிலும், பின்னர் ஐக்கிய ஜனதா தளம் கட்சியிலும் இருந்தார். பின்னர் மீண்டும் காங்கிரஸுக்குத் திரும்பினார். 2016ம் ஆண்டில், சித்தராமையா அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் அவர் பாஜகவில் சேர்ந்தார். ஸ்ரீநிவாஸ் பிரசாத்துக்கு மனைவி பாக்யலட்சுமி மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர். இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in