ரச்சின் ரவீந்திரா
ரச்சின் ரவீந்திரா

சாதித்த ரச்சின் ரவீந்திரா… தேடி வந்த விருது!

இந்த மாதத்திற்கான சிறந்த ஐசிசி வீரராக நியூசிலாந்து அணியின் இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஐசிசி மாதம் தோறும் சிறப்பாக விளையாடும் வீரர்களை தேர்வு செய்து, 'பிளேயர் ஆஃப் த மந்த்' என்ற விருதை வழங்கி வருகிறது. இந்நிலையில், இந்த மாத சிறந்த வீரருக்கான பட்டியலில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் மும்ரா, நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா மற்றும் தென்னாப்பிரிக்காவின் குவென்டின் டிகாக் ஆகியோர் இறுதி செய்யப்பட்டனர். அதில் நடப்பு உலகக் கோப்பை தொடரில் தொடர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டு வரும் ரச்சின் ரவீந்திரா ’பிளேயர் ஆஃப் த மந்த்’ விருதினை வென்றார்.

மேற்கு இந்திய தீவுகள் ஹாலே மேத்யூஸ் ’
மேற்கு இந்திய தீவுகள் ஹாலே மேத்யூஸ் ’

ரச்சின் நடப்பு தொடரில் 3 சதத்துடன் 565 ரன்களை குவித்து இந்த விருதினை தட்டிச்சென்றுள்ளார். அதோடு மட்டுமல்லாமல், அவர் இளம் வயதில் உலகக் கோப்பை தொடரின் அதிக ரன் குவித்த வீரர் என்ற பெருமையும், அதிக சதமடித்த இளம் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். மகளிர் கிரிக்கெட்டில் மேற்கு இந்திய தீவுகள் அணியின் ஹாலே மேத்யூஸ் ’பிளேயர் ஆஃப்த மந்த்’ விருதினை பெற்றுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

பயணிகள் அதிர்ச்சி! தீபாவளியையொட்டி... விமான கட்டணங்களிலும் கொள்ளை!

வைகை அணை திறப்பு… 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

ஐயப்பனுக்கு தங்க அங்கி..  சபரிமலையில் இன்று நடை திறப்பு!

ரூ.25,00,000 பரிசுத் தொகையை... தான் படித்த கல்லூரிகளுக்கு பிரித்துக் கொடுத்த வீரமுத்துவேல்... குவியும் பாராட்டுக்கள்!

செம ஹிட்டு... தீபாவளி கொண்டாட்டம்... 'ஜிகர்தண்டா2' படத்திற்கு முதல் ரிவியூ கொடுத்த பிரபலம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in