அகமதாபாத்தில் கோலாகலம்... புரோ கபடி லீக் போட்டி இன்று தொடங்குகிறது!

புரோ கபடி லீக்
புரோ கபடி லீக்
Updated on
1 min read

புரோ கபடி லீக் தொடரின் 10-வது சீசன் அகமதாபாத்தில் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது. முதல் லீக் ஆட்டத்தில் குஜராத் ஜயன்ட்ஸ் – தெலுகு டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

வருகிற 7-ம் தேதி வரை அகமதாபாத்தில் நடைபெறும் இந்த போட்டியின் லீக் சுற்று ஆட்டங்கள் அடுத்து பெங்களூரு,புனே, சென்னை,நொய்டா,மும்பை,ஜெய்ப்பூர், ஐதராபாத்,பாட்னா, டெல்லி,கொல்கத்தா,பஞ்ச்குலா ஆகிய நகரங்களில் நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து நடைபெறும் பிளே-ஆப் சுற்று அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடரில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரட்ஸ், யு மும்பா, பெங்களூரு புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ், தபாங் டெல்லி மற்றும் புனேரி பால்டன், தெலுங்கு டைட்டன்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், ஹரியாணா ஸ்டீலர்ஸ், தமிழ் தலைவாஸ், உ.பி.யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் பங்கேற்கின்றன.

கடந்த அக்டோபர் மாதம் நடந்த வீரர்கள் ஏலத்தில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையில்லாத வீரர்களை கழற்றி விட்டு விட்டு, தேவையான வீரர்களை விலைக்கு வாங்கியதுடன் அணியை வலுவாக தயார்படுத்தி களம் இறங்குகின்றன.

புரோ கபடி லீக்
புரோ கபடி லீக்

இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றை எட்டும். லீக்கில் டாப்-2 இடங்களைக் கைப்பற்றும் அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறும். 3 முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் எலிமினேட்டர் சுற்றில் மோதி அதில் வெற்றி பெறும் 2 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

தொடக்க நாளான இன்று 2 லீக் ஆட்டங்கள் நடக்கிறது. தொடக்க ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ், தெலுங்கு டைட்டன்சுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து இரவு 9 மணிக்கு நடைபெறும் 2-வது லீக் ஆட்டத்தில் யு மும்பா - உ.பி.யோத்தாஸ் அணிகள் மோதுகின்றன.

இதையும் வாசிக்கலாமே...


HBD Napoleon| திரையில் வில்லன்... நிஜத்தில் ஹீரோ!

பரபரப்பு... முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறாரா கேஜ்ரிவால்?

முதல் முறையாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் விடிய, விடிய லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: முக்கிய ஆவணங்கள் பறிமுதல்!

மிஸ் பண்ணாதீங்க... தமிழகம் முழுவதும் இன்று மருத்துவக் காப்பீடு முகாம்!

கொட்ற மழையில் ரசிகர்களை தெறிக்க விட்ட நடிகை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in