மீண்டும் களத்திற்கு திரும்பும் நவோமி ஒஸாகா… ஆஸ்திரேலிய ஓபனுக்கு தயார்!

நவோமி ஒஸாகா
நவோமி ஒஸாகா

உலகின் சிறந்த டென்னிஸ் வீராங்கனைகளில் ஒருவரான நவோமி ஒஸாகா மீண்டும் களத்திற்கு வர உள்ளதாக அறிவித்துள்ளார்.

ஜப்பான் நாட்டை சேர்ந்த நவோமி ஒஸாகா உலகின் நம்பர் 1 வீராங்கனையாக அறியப்பட்டவர். 2 முறை அமெரிக்க ஓபன் பட்டமும், 2 முறை ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தையும் கைப்பற்றியுள்ளார். இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய ஓபன் தொடருக்கு முன்னதாக தான் கர்ப்பமாக இருப்பதாகவும், அதன் காரணமாக தொடரில் இருந்து விலகுவதாகவும் அறிவித்திருந்தார். இதனால், இந்த ஆண்டு முழுவதும் டென்னிஸ் களத்திற்கு திரும்பாமல் இருந்த ஒஸாகா அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ளது ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்க திட்டமிட்டுள்ளார்.

காதலர் கோர்டேயுடன்  ஒஸாகா
காதலர் கோர்டேயுடன் ஒஸாகா

அதற்கு பயிற்சி மேற்கொள்ளும் விதமாக டிசம்பர் 31 முதல் ஜனவரி 7ம் தேதி வரை நடைபெற உள்ள பிரிஸ்பேன் இன்டர்நேஷனல் டென்னிஸ் தொடரில் விளையாட உள்ளார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 14ம் தேதி தொடங்கி 28ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஜப்பான் வீராங்கனை நவோமி ஒஸாகா பங்கேற்க உள்ளார்.

இதுகுறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள அவர், ”நான் மீண்டும் டென்னிஸ் போட்டிகளுக்கு திரும்பியுள்ளதில் மிகவும் உற்சாகமாக இருப்பதாக கூறியுள்ளார். மேலும், அதற்கு முன்னதாக பிரிஸ்பேன் தொடரில் கொள்ள உள்ளதாகவும் ஒஸாகா தெரிவித்துள்ளார். ஒஸாகா, அமெரிக்க ராப் பாடகர் கோர்டே எம்பவரை கடந்த 2019ம் ஆண்டிலிருந்து காதலித்து வந்தார். இந்த ஆண்டு ஜூலை மாதம் இந்த ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்தது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in