அதிர்ச்சி... ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகினார் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம்!

முரளி ஸ்ரீசங்கர்
முரளி ஸ்ரீசங்கர்

ஆசிய மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற நீளம் தாண்டுதல் வீரரான முரளி ஸ்ரீசங்கர் காயம் காரணமாக ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

பாரீஸில் ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெற உள்ளது. இதற்கான கவுன்டவுன் தொடங்கியுள்ளது. இதனால் போட்டிகள் தொடங்க இன்னும் 98 நாட்களே உள்ளன. இப்போட்டியில் தகுதி பெற அனைத்து நாடுகளையும் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கடுமையான பயிற்சி மூலம் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில், இந்தியாவிற்கு பின்னடைவை ஏற்படும் செய்தி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வோம் என்ற நம்பிக்கையில் இருந்த பிரபல நீளம் தாண்டுதல் வீரர் முரளி ஸ்ரீசங்கர், பயிற்சியின் போது முழங்காலில் ஏற்பட்ட காயம் கரணமாக ஒலிம்பிக்கில் இருந்து விலகியுள்ளார். ஆசிய மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஸ்ரீசங்கர் 2023-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியில் 8.37 மீட்டர் தூரம் தாண்டி சாதனை படைத்துள்ளார்.

முரளி ஸ்ரீசங்கர்
முரளி ஸ்ரீசங்கர்

இதன் மூலம் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். ஒலிம்பிக்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பதக்கம் வெல்வோம் என்ற நம்பிக்கையில் இருந்தார். ஆனால், தற்போது அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் பதக்கம் வெல்லும் அவரது கனவு கலைந்துள்ளது.

இந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய விளையாட்டு வீரர்களுக்கு வீட்டு சாப்பாடு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒலிம்பிக் விளையாட்டு கிராமத்தில் அனைத்து விளையாட்டு வீரர்களும் இந்திய பாணி உணவுகளை பெறுவது இதுவே முதல் முறை. ரொட்டி, பருப்பு, ஆலு கோபி, சிக்கன் போன்ற இந்திய உணவுகள் இந்த முறை கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக விளையாட்டு நிகழ்வுகளில் ஒவ்வொரு முறையும் இந்திய விளையாட்டு வீரர்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சினை உணவு தான். டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் கூட, சரியான ஊட்டச்சத்து உணவு கிடைக்கவில்லை என்று இந்திய விளையாட்டு வீரர்கள் புகார் தெரிவித்தனர். இந்த நிலையில், இம்முறை இந்திய விளையாட்டு வீரர்களின் உணவுப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டதாகத் தெரிகிறது. தெற்காசிய உணவுகளை சேர்க்குமாறு இந்திய ஒலிம்பிக் அமைப்பு அமைப்பாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்தக் கோரிக்கையை ஏற்பாட்டாளர்கள் ஏற்றுக்கொண்டதாக இந்திய ஒலிம்பிக் அணியின் துணைத் தலைவர் சிவ கேசவன் தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...


வரிசையில் காத்திருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாக்கினை செலுத்தினார்!

வாக்களிப்பது தான் மரியாதை...நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி!

வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு... தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு தாமதம்!

பணம் கொடுத்ததாக நிரூபித்தால் அரசியலை விட்டே விலகுகிறேன்... அண்ணாமலை சவால்!

ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த மூத்த வாக்காளர்... சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ள தேர்தல் ஆணையம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in