வங்கதேசத்துக்கு எதிரான போட்டி: ரன் மிஷின் மேக்ஸ்வெல் நாளை விளையாட மாட்டார்!

மேக்ஸ்வெல்
மேக்ஸ்வெல்

வங்கதேசத்துக்கு எதிராக நாளை நடைபெறும் கடைசி போட்டியில் ஆஸ்திரேலியா வீரர் மேக்ஸ்வெல் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேக்ஸ்வெல்
மேக்ஸ்வெல்

உலகக்கோப்பை கிரிக்கெட் 39வது லீக் ஆட்டம் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே மும்பை வான்கடே மைதானத்தில் நவ.7-ம் தேதி நடைபெற்றது. அப்போதுஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள் எடுத்தது.

சிறப்பாக ஆடி சதமடித்த இப்ராஹிம் 129 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பின்னர் 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி ஆப்கானிஸ்தான் பந்து வீச்சில் திணறியது. தொடக்க ஆட்டக்காரர் ஹெட் ரன் ஏதும் எடுக்காமலும், வார்னர் 18 ரன்களிலும் வெளியேறினர். மார்ஸ் 24, இங்லிஸ் 0, லபுசேன் 14, ஸ்டாய்னிஸ் 6, ஸ்டார்க் 3 என அவுட் ஆக 91-7 என தடுமாறியது. அதன்பின் இணைந்த மேக்ஸ்வெல், கேப்டன் கம்மின்ஸ் இணை பொறுமையாக ஆடத் தொடங்கியது.

கொஞ்ச நேரம் பொறுமை காத்த மேக்ஸ்வெல், பின் தனது அதிரடியை காட்டத் தொடங்கினார். சிறப்பாக ஆடிய அவர் சதத்தைக் கடந்தார். கம்மின்ஸ் அவருக்கு ரொடேட் செய்து தரும் வேலையை மட்டும் செய்தார். தொடர்ந்து ஆடிய மேக்ஸ்வெல்லுக்கு தொடையில் ஹார்ம்ஸ்டிரிங் ஏற்பட்டது. அதையும் பொறுத்துக் கொண்டு ஆடினார்.

ஒரு சமயத்தில் நடக்கக்கூட முடியாத நிலை ஏற்பட்டது. ஆனாலும், வெறி கொண்டு ஆப்கானிஸ்தான் பந்து வீச்சாளர்களை பதம் பார்த்தார். தொடர்ந்து மிரட்டிய மேக்ஸ்வெல் ஒருநாள் கிரிக்கெட்டில் தன் முதல் இரட்டை சதத்தை அடித்தார். ஒரு ஆஸ்திரேலிய வீரரால் அடிக்கப்பட்ட முதல் இரட்டை சதம் இதுவாகும். இதற்கு முன் ஷேன் வாட்சன் எடுத்த 185 ரன்களே அதிகபட்சமாக இருந்தது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று 201 ரன்கள் குவித்து தனி ஆளாக வெற்றியை ஆப்கானிஸ்தானிடமிருந்து பறித்தார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக காயத்துடன் மேக்ஸ்வெல் முழங்கால் வலியுடன் விளையாடியதால் அவரது காயம் மோசமானது. இதன் காரணமாக வங்கதேசத்துக்கு எதிராக புணேவில் நாளை நடைபெறும் போட்டியில் மேக்ஸ்வெல் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக சியான் அபோட் களமிறங்க உள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in