மானநஷ்ட வழக்கு... தோனிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

தோனி, சம்பத்குமார்
தோனி, சம்பத்குமார்

மான நஷ்ட வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ஐபிஎஸ் அதிகாரியின் மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் கிரிக்கெட் வீரர் தோனிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

மகந்திர சிங் தோனி
மகந்திர சிங் தோனி

கடந்த 2013ம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது சென்னை, ராஜஸ்தான் அணிகளின் நிர்வாகங்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, இரண்டு அணிகளுக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு கிரிக்கெட் விளையாட 2015-ல் தடைவிதிக்கப்பட்டது.

இந்த சூதாட்ட வழக்கை விசாரித்த ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார், இந்த சூதாட்டப் புகாரில் தோனியின் பெயரும் உள்ளதாக தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார். இதையடுத்து, சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாருக்கு எதிராக ரூ. 100 கோடி நஷ்டஈடு கேட்டு தோனி வழக்கு தொடர்ந்தார்.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

இந்த வழக்கில் சம்பத்குமாருக்கு 15 நாள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து சம்பத்குமார் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் அபேய் எஸ்.ஒகா மற்றும் உஜ்ஜால் புயான் ஆகியோர் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, சம்பத்குமார் தரப்பு வழக்கறிஞர் சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்க கோரிக்கை வைத்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், சம்பத்குமாருக்கு விதிக்கப்பட்ட 15 நாள் சிறைத்தண்டனையை நிறுத்தி வைத்தனர். மேலும், இந்த வழக்கில் பதிலளிக்க தோனிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் வாசிக்கலாமே...

ஸ்ரீதேவி மரணத்தில் மர்மம்... பிரதமர் பெயரில் போலி கடிதம் தயாரித்த இளம்பெண்!

'லால் சலாம்' படத்தை வெளியிட தடை!?

கட்சியைக் கைப்பற்ற சாட்டை துரைமுருகன் திட்டம்... என்ஐஏ சோதனையில் வெளியான அதிர்ச்சி!

நடிகர் விஜயால் இத்தனை கோடி நஷ்டமா?: தீயாய் பரவும் தகவல்!

நடிகை ஜெயலட்சுமிக்கு கொலைமிரட்டல்... போலீஸில் பரபரப்பு புகார்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in