விராட் கோலியை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்... இளம் வீரர்களுக்கு கௌதம் கம்பீர் அறிவுரை!

கவுதம் கம்பீர் - விராட் கோலி
கவுதம் கம்பீர் - விராட் கோலி

வளர்ந்து வரும் இளம் வீரர்கள் விராட் கோலியின் ஃபிட்னஸை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் கூறியுள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மல்லுக்கட்டின. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி இந்திய வீரர்களின் சிறப்பான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 199 ரன்களில் ஆட்டமிழந்தது.

இந்த போட்டியின் போது 200 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி வெகு விரைவாக வெற்றி கோட்டினை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இஷான் கிஷன், ரோகித் சர்மா, ஷ்ரேயாஸ் ஐயர் என அடுத்தடுத்து மூன்று வீரர்கள் டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர்.

விராட்
விராட்

இதன்காரணமாக இந்திய அணி 2 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன் பின்னர் விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்த கே.எல் ராகுல் அற்புதமாக இன்னிங்சை கட்டமைத்தார். அவர்கள் இருவரும் மூன்றாவது விக்கெட்க்கு 165 ரன்கள் சேர்க்கவே இந்திய அணி வெற்றியை நோக்கி எளிதாக சென்றது. குறிப்பாக விராட் கோலி 85 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து இருந்தாலும் கே.எல் ராகுல் 97 ரன்கள் குவித்து இறுதிவரை களத்தில் நின்று இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றிருந்தார். இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணியின் முன்னணி வீரரான விராட் கோலி விளையாடிய விதம் வளர்ந்து வரும் இளம் வீரர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரரான கௌதம் காம்பீர் பாராட்டியுள்ளார்.

இது குறித்து பேசிய கம்பீர், “வளர்ந்து வரும் இளம் வீரர்கள் விராட் கோலியின் ஃபிட்னஸை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும். இன்றளவும் விராட் கோலி விக்கெட்டுகளுக்கு இடையில் ரன்களை எவ்வளவு வேகமாக ஓடி எடுக்கிறார் என்று பாருங்கள். அதோடு டாட் பால்களை குறைத்துக் கொண்டு தொடர்ச்சியாக ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்து பவுலர்களின் மீது அவர் அழுத்தத்தை கொடுக்கிறார்.

விராட் கோலி
விராட் கோலி

அவரை போன்று ரிஸ்க் இல்லாமல் டாட் பாலை குறைத்துக் கொண்டு ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்வதை இளம் வீரர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்” என பேசியுள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கெதிரான இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 116 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 85 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in