டிசம்பர் 19ம் தேதி ஐபிஎல் ஏலம் - பிசிசிஐ அறிவிப்பு!

ஐபிஎல் ஏலம்
ஐபிஎல் ஏலம்

2024ம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் 19ம் தேதி துபாயில் நடைபெறும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

உலக அளவில் நடைபெறும் லீக் கிரிக்கெட்டில் ஐபிஎல் தொடர் முதல் இடத்தில் உள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், குஜராத் டைட்டன்ஸ் உள்பட 10 அணிகள் விளையாடி வருகின்றன. இந்த தொடரில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மெகா ஏலமும், ஆண்டு தோறும் மினி ஏலமும் நடத்தப்படுவது வாடிக்கை. இந்நிலையில், 2024ம் ஆண்டிற்கான வீரர்கள் மினி ஏலம் இந்த ஆண்டு டிசம்பர் 19ம் தேதி நடைபெற உள்ளது.

ஐபிஎல்
ஐபிஎல்

இந்த ஆண்டு ஒரு அணி 100 கோடி வரை செலவழித்து ஏலம் எடுக்கலாம் என பிசிசிஐ அறிவித்துள்ளது. அதாவது கடந்த ஆண்டை விட 5 கோடி ரூபாய் கூடுதலாக ஒரு அணிக்கு வழங்கப்படும். ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை வெளியேற்றுகிறார்களே அவர்களின் மதிப்பிற்கு ஏற்ப அணியின் இருப்பு வைக்கப்படும். அதன் அடிப்படையில் ஏலத்தில் கலந்துகொண்டு வீரர்களை தேர்வு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 15ம் தேதிக்குள் வெளியேற்றப்படும் வீரர்களின் பட்டியலை அளிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in