அதிரவிட்ட அஸ்வினின் பந்துவீச்சு... 221 ரன்கள் குவித்த டெல்லி கேபிடல்ஸ்... வெற்றிக்கணக்கை தொடருமா ராஜஸ்தான்!

அஸ்வின்
அஸ்வின்
Updated on
2 min read

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி 221 ரன்களை குவித்துள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனையடுத்து டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அபிஷேக் போரல் மற்றும் ஜேக் ஃப்ரேசர் மெக்குர்க் இணை அதிரடியாக ஆடியது. ராஜஸ்தான் பந்துவீச்சை ரவுண்டு கட்டிய ஜேக் ஃப்ரேசர் 19 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். ஆனால், அஸ்வின் வீசிய 5ஆவது ஓவரில் கேட்ச் கொடுத்து அவுட்டாகி கிளம்பினார். அவர் 20 பந்துகளில் 50 ரன்கள் குவித்தார்.

டெல்லி ராஜஸ்தான்
டெல்லி ராஜஸ்தான்

இதனை அடுத்து வந்த ஷாய் ஹோப் 1 ரன்னில் ரன் அவுட்டாக, அடுத்ததாக அக்சர் படேல் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடியாக ஆடி வந்த அபிஷேக் 36 பந்துகளில் 65 ரன்களில் விக்கெட்டானார். தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ரிஷப் பந்த் 15 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

இதனையடுத்து டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் குல்பாடின் நையிப் ஜோடி இணைந்து டெல்லியின் ஸ்கோரை உயர்த்த ஓரளவு உதவி செய்தனர். தொடர்ந்து குல்பாடின் 19 ரன்களிலும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 41 ரன்களிலும், ரஷீக் சலாம் 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி 221 ரன்களை குவித்தது.

டெல்லி ராஜஸ்தான்
டெல்லி ராஜஸ்தான்

ராஜஸ்தான் அணி தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், சாஹல், சந்தீப் சர்மா, போல்ட் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். தொடர்ந்து ராஜஸ்தான் அணி 222 ரன்கள் இலக்கோடு ஆடி வருகிறது அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர் முதல் ஓவரின் இரண்டாம் பந்திலேயே கலீல் அகமது பந்தில் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் ராஜஸ்தான் அணி 2.5 ஓவர்கள் முடிவில் 23 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

குழந்தையை தூக்கிப் போட்டுப் பிடித்து கொஞ்சி மகிழ்ந்த பிரதமர் மோடி... தீயாய் பரவும் வீடியோ!

சுங்கக் கட்டணம் செலுத்தாமல் சென்ற கார்... தடுத்த ஊழியர் மீது காரை ஏற்றியதால் பரபரப்பு!

இளையராஜா இசை தயாரிப்பாளருக்குத்தான் முழு சொந்தம்... தமிழ்பட இசையமைப்பாளர் பேட்டி!

பெண் ஓட்டிச் சென்ற காரை துரத்திச் சென்று பீர் பாட்டில்களால் தாக்குதல்... வைரலாகும் வீடியோவால் அதிர்ச்சி!

அதிர்ச்சி... வெயிலில் சுருண்டு விழுந்து தேர்தல் அதிகாரி உயிரிழப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in