43வது வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டம்... ரோஹன் போபண்ணாவுக்கு ரூ.50 லட்சம் பரிசு; சித்தராமையா சிறப்பு!

ரோஹன் போபண்ணா, சித்தராமையா
ரோஹன் போபண்ணா, சித்தராமையா
Updated on
1 min read

ஆஸ்திரேலியா ஓபனில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ரோஹன் போபண்ணாவிற்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா ரூ.50 லட்சம் பரிசுத்தொகை அறிவித்துள்ளார்.

ரோஹன் போபண்ணா, மேத்யூ எப்டன்
ரோஹன் போபண்ணா, மேத்யூ எப்டன்

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த டென்னிஸ் விளையாட்டு வீரர் ரோஹன் போபண்ணா. இவர் சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியா ஓபன் ஆடவர் இரட்டையர் இறுதிப் போட்டியில் ரோஹன் போபண்ணா மற்றும் மேத்யூ எப்டன் ஜோடி பட்டம் வென்றது. அந்தப் போட்டியில் இத்தாலிய ஜோடியான சைமன் பொலேல்லி - ஆண்ட்ரியா வாவசோரியை போராடி வீழ்த்தி இவர்கள் ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை தன்வசப்படுத்திக் கொண்டனர். இதன் மூலம் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற மிக வயதான வீரர் என்ற சாதனையை ரோஹன் போபண்ணா படைத்தார். மேலும், இதுவே ஆடவர் இரட்டையர் பிரிவில் அவரது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும்.

பல ஆண்டுகள் போராட்டத்துக்கு பின் தன் 43வது வயதில் ரோஹன் போபண்ணா கிராண்ட்ஸ்லாம் வென்று சாதனை படைத்து இருக்கிறார். அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இந்நிலையில், ரோஹன் போபண்ணாவை நேரில் அழைத்து கர்நாடக முதல்வர் சித்தராமையா வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில்,"ஆஸ்திரேலியா ஓபன் ஆடவர் இரட்டையர் பிரிவில் வெற்றிப் பெற்று சாதனைப் புரிந்துள்ள போபண்ணாவை சந்தித்து வாழ்த்து கூறினேன். அவரது வெற்றியை கெளரவிக்கும் வகையில் ரூ.50 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அறிவித்துள்ளேன்" என்று பதிவிட்டுள்ளார். இதற்கு முன்னதாக ரோஹன் போபண்ணா, டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றிருந்தார்.

இதையும் வாசிக்கலாமே...

'ஒரே நாடு ஒரே தேர்தல்' கூட்டாட்சிக்கு எதிரானது... சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தீர்மானம்!

இரட்டை குழந்தைகள், மனைவி கொலை... வெறிபிடித்த கணவன் எடுத்த விபரீத முடிவு!

#AK63 : நண்பர் மறைவால் அஜித் எடுத்த முடிவு... ரசிகர்கள் அப்செட்!

காதலர் தினம்... தாலியுடன் வந்த இந்து அமைப்பினர்...  தெறித்து ஓடிய காதல் ஜோடிகள்!

காதலர் தின ஸ்பெஷல்... மகன்களுக்கு முத்தமிட்டு கொஞ்சிய நயன்தாரா!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in