'ஒரே நாடு ஒரே தேர்தல்' கூட்டாட்சிக்கு எதிரானது... சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தீர்மானம்!

சட்டமன்றத்தில் பேசும் முதல்வர் ஸ்டாலின்
சட்டமன்றத்தில் பேசும் முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  கொண்டுவந்த இரண்டு தனித் தீர்மானங்களில் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறு சீரமைப்புக்கு எதிர்ப்பு தீர்மானத்திற்கு பாஜகவும் ஆதரவு தெரிவித்துள்ளது.

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனி தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார்.  அதேபோல மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி சீரமைப்பு முடிவைக் கைவிட வேண்டும் மற்றொரு  தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. 

"மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி வரையறை என்பது தென் மாநிலங்கள் மீது தொங்கும் கத்தியாகும்.  தொகுதி வரையறையால் தமிழகம் பெரும் பாதிப்பைச் சந்திக்கும். மக்கள் தொகை  விகிதாச்சாரப்படி பார்த்தால் தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கைகள் குறைந்துவிடும்.  அது மட்டும் இல்லாமல் கூட்டாட்சி தத்துவத்திற்கு இது எதிரானது. 

பேரவையில் முதல்வர் ஸ்டாலின்
பேரவையில் முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு அரசு மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியதற்கான பரிசாக தொகுதி எண்ணிக்கை குறைப்பு அமைந்துவிடும். அதிக தொகுதிகள் மூலம் ஆதிக்கம் செலுத்த முற்படுவது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்று பேசினார்.

மேலும்  ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது அரசமைப்புக்கு எதிரானது, மக்களவைத் தேர்தலை கூட ஒரே நாளில் நடத்த முடியாத நிலையில் சட்டப்பேரவை, உள்ளாட்சி என்று எல்லா தேர்தல்களையும் எப்படி ஒரே முறையில் நடத்த முடியும் என்று அவர் கேள்வி எழுப்பினார். எனவே அந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தனித் தீர்மானங்களை தாக்கல் செய்து முதல்வர் ஸ்டாலின் பேசினார்.  இந்த தனித் தீர்மானங்களை ஒரு மனதாக நிறைவேற்றி தர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

அதனையடுத்து அதன் மீதான விவாதம் தொடங்கியது. முதலில் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் தீர்மானத்தை ஆதரித்து பேசினார். அவரைத் தொடர்ந்து  கொமதேக உறுப்பினர் ஈஸ்வரன் பேசினார்.

முதல்வர் கொண்டு வந்த தனித் தீர்மானங்களின் மீது பேசிய பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன், மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறு சீரமைப்பு குறித்த மாநில அரசின், மக்களின் கவலையை தாங்களும் புரிந்து கொள்வதாகவும், இதுகுறித்து மத்திய அரசிடம் தாங்களும் பேசுவதாகவும் கூறினார். அதே நேரத்தில் ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்த தனித் தீர்மானம் அவசியமில்லாதது என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தார். பேரவையில் முதல்வர் முன்மொழிந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதையும் வாசிக்கலாமே...

பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் வந்தே மாதரம் பாடிய 35,000 பேர்... அதிர்ந்து போன அமீரகம்!

ஒரு மகன் போனாலும் ஓராயிரம் மகன்கள், மகள்கள் உள்ளனர்... சைதை துரைசாமி உருக்கம்!

அரசு பள்ளிகளில் இனி ஆன்லைன் சேர்க்கை... விரைவில் வெளியாகிறது உத்தரவு!

கீர்த்திக்கு கொடுத்த முதல் கிஃப்ட்...வசமாய் சிக்கிய அசோக்செல்வன்!

துணை முதல்வர் மீது சொத்துக் குவிப்பு... லோக் ஆயுக்தா அதிரடி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in