ஐசிசி டெஸ்ட் தரவரிசை... மீண்டும் அஸ்வின் முதலிடம்; விராட் கோலிக்கு பின்னடைவு!

ரவிச்சந்திரன் அஸ்வின்
ரவிச்சந்திரன் அஸ்வின்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சிறந்த வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த பந்துவீச்சாளர் பட்டியலில் அஸ்வின் மீண்டும் முதலிடம் பிடித்தார்.

டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணி
டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணி

இந்தியா - இங்கிலாந்து இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி மற்றும் ஆஸ்திரேலியா -நியூசிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி அண்மையில் நிறைவடைந்தது. இதை அடுத்து ஐ.சி.சி. சிறந்த வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் நியூசிலாந்தை சேர்ந்த வில்லியம்சன் முதலிடத்திலும், இங்கிலாந்தை சேர்ந்த ஜோ ரூட் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் சுமித் 2 இடங்கள் சரிந்து ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

ரோகித் சர்மா
ரோகித் சர்மா

இதேபோல் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து அசத்திய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பட்டியலில் முன்னேறி மற்றொரு இந்திய வீரரான விராட் கோலியை முந்தினார். இதன் மூலம் அவர் 6-வது இடத்தை பிடித்துள்ளார். மேலும் ஜெய்ஸ்வாலும் இரண்டு இடங்கள் முன்னேறி கோலியை தாண்டி 8-வது இடத்தை பிடித்துள்ளார். இதனால் விராட் கோலி 9-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

பும்ரா
பும்ரா

டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்திய வீரர் பும்ரா மூன்றாவது இடத்திற்கு சரிந்துள்ளார். இதன் மூலம் இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகள் வீழ்த்திய அஸ்வின் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறினார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஹேசில்வுட் இரண்டாவது இடத்திலும், மற்றொரு இந்திய வீரரான ஜடேஜா 7-வது இடத்தில் உள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in