மாஸ் வீடியோ... விஜய் வழியில் சிவகார்த்திகேயன்... அரசியலுக்கு அச்சாரம் போடும் மெகா திட்டம்?!

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்

விரைவில் மக்களவைத் தேர்தல் வரவுள்ள நிலையில், கோலிவுட்டில் 2026 தேர்தலையொட்டி பலருக்கும் அரசியல் ஆசை வந்திருக்கிறது. நடிகர் விஜய் உச்ச நடிகராக வலம் வரும் போதே திடீரென அரசியல் கட்சி தொடங்கி அடுத்தடுத்த நகர்வுகளை நோக்கி விறுவிறுப்பாக காய் நகர்த்தி வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் வெளியான சிவகார்த்திகேயனின் வீடியோவைப் பார்த்து நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் அப்படி ஒரு ஆசை வந்துவிட்டதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சென்னை போரூரில் உள்ள பெரிய திருமண மண்டபம் ஒன்றில் தனது ரசிகர்களை ஒன்று திரட்டி சந்தித்து இருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். தமிழ்நாடு சிவகார்த்திகேயன் நற்பணி இயக்க நிர்வாகிகள் சந்திப்பு என பேனர் அடித்து மாஸ் காட்டியிருக்கிறார்கள் ரசிகர்கள். ’மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்’ என அந்த பேனரில் குறிப்பிடப்பட்டிருப்பது சினிமா வட்டாரத்தில் பலரையும் புருவம் உயர்த்த வைத்திருக்கிறது. ஹெலிகேம் வைத்து, சிவா எண்ட்ரி முதற்கொண்டு, ரசிகர்களின் கூட்டம் என தேர்ந்த கட்சித் தலைவருக்கான அறிமுக வீடியோவாக வைரலாகி வருகிறது.

’’புலியை பார்த்து பூனை சூடு போட்ட கதையாக’ விஜயைப் போலவே சிவகார்த்திகேயனுக்கும் அரசியல் ஆசை வந்துவிட்டதா?’, ’விஜயைப் போலவே சட்டமன்ற தேர்தலை இலக்காக வைத்திருக்கிறாரா?’ எனப் பலரும் இணையத்தில் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். ஏனெனில், நடிகர் விஜயை முன்மாதிரியாக வைத்து தான் சிவகார்த்திகேயனும் சினிமாவில் வளர்ந்தார்.

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்

விஜயும் அரசியல் கட்சித் தொடங்கும் முன்பு இப்படித்தான் தொடர்ச்சியாக தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்திப்பது, ரசிகர்களுக்கு பிரியாணி கொடுப்பது, இக்கட்டான சூழலில் உதவுவது எனப் பல விஷயங்களை செய்து வந்தார்.

இதனை தற்போது சிவகார்த்திகேயனும் செய்ய ஆரம்பித்திருக்கிறார் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். ஆனால், இப்போது படத்தின் வெற்றியை பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் தான் தீர்மானிக்கும் சூழல் இருக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டும், ரசிகர்களுடன் பிணைப்பில் இருக்கவும் தான் சிவகார்த்திகேயன் இப்படி கூட்டத்தைக் கூட்டி மாஸ் காண்பித்திருக்கிறார் என சொல்லப்படுகிறது. வர இருக்கும் இவரது ‘அமரன்’ படம் பாக்ஸ் ஆஃபிஸில் ரூ. 100 கோடியை கடந்தால் சிவகார்த்திகேயன் மார்க்கெட் நிச்சயம் வலுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

மத்திய அரசில் 314 பணியிடங்கள் காலி... மார்ச் 18-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!

இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டி... ஓபிஎஸ் உறுதியால் சின்னம் முடங்குமா?

பள்ளி மாணவர்களுக்கு குட்நியூஸ்... 45 நாட்களுக்கு கோடை விடுமுறை!

சிஎஸ்கே அணிக்கு 'தல' தோனிக்குப் பிறகு யாரு கேப்டன்?... செயல் அதிகாரி கொடுத்த ட்விஸ்ட்!

விடிய, விடிய பேச்சுவார்த்தை... பாஜக அணியில் டி.டி.வி. தினகரனுக்கு 4, ஓபிஎஸ்சுக்கு 2 தொகுதிகள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in