ஹர்திக் பாண்டியாவுக்கு இரண்டு வாரம் ஓய்வு- பிசிசிஐ அறிவிப்பு!

ஹர்திக் பாண்டியா
ஹர்திக் பாண்டியா

ஹர்திக் பாண்டியாவின் கால் தசை கிழிவு பிரச்சினை ஏற்பட்டுள்ளதால் அவர் அடுத்து வரும் சில போட்டிகளில் கலந்துகொள்ள மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 19ம் தேதி வங்கதேசத்திற்கு எதிராக நடைபெற்ற உலகக் கோப்பை லீக் போட்டியில் இந்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவிற்கு காயம் ஏற்பட்டது. வங்கதேச வீரர் லிட்டதாய் அடித்த பந்தை தடுக்க முயன்ற போது பந்து பாண்டியாவில் காலில் பட்டது. இதனால், வலியில் துடித்த அவர் ஆட்டத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். அவருக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்ட நிலையில், பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு அனுப்பப்பட்டார்.

காயமடைந்த நிலையில் ஹர்திக் பாண்டியா
காயமடைந்த நிலையில் ஹர்திக் பாண்டியா

அங்கு மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ள பாண்டியா மீண்டும் எப்போது அணிக்கு திரும்புவார் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், அவரது காலில் உள்ள தசைப்பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் குணமாக இன்னும் ஒரு சில வாரங்கள் தேவை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குறைந்தபட்சம் 2 வார காலம் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். இதனால், பாண்டியா வரும் 29ம் தேதி நடைபெறும் இங்கிலாந்துடனான போட்டி மட்டுமல்லாது இலங்கை, தென்னாப்பிரிக்க அணிகளுடனான போட்டியிலும் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், அவருக்கு மாற்று வீரரை அணியில் சேர்க்கும் திட்டம் இல்லை என பிசிசிஐ தெரிவித்துள்ளது. அதனால், இரண்டு வாரம் கழித்தே பாண்டியா அணிக்கு திரும்புவார் என்பது உறுதியாகியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in