இளம்பெண் தீப்பற்றி எரிந்து பலியான சோகம்... போலீஸார் விசாரணை!

வனிதா
வனிதா

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த நிலையில் தீப்பற்றி  உடல்கருகி  பெண் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே கோபாலனூர் கருவறையான் காடு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் மகள் வனிதா( 23). பி. காம் பட்டதாரி. இவருக்கு இன்னும்  திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாதபோது வீட்டின் சமையல் அறையில் இருந்து உடலில் பற்றி எரியும் தீயுடன் வனிதா அலறி துடித்தார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். இதுகுறித்து உடனடியாக  சங்ககிரி தீயணைப்பு நிலைய அலுவலகத்துக்கு தகவல் அளித்தனர். நிலைய அலுவலர்  அருள்மணி மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  வனிதா மீது எரிந்த தீயை அணைத்தனர்.  ஆனால் அதற்குள் வனிதா முற்றிலுமாக  உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த  சங்ககிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி மற்றும் போலீஸார் வனிதாவின்  உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும்   இதுகுறித்து  வழக்குப்பதிவு செய்த போலீஸார், வனிதா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வீட்டில் சமையல் செய்தபோது அவர் மீது தீப்பற்றி எரிந்ததில் அவர் பலியானாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

பட்டதாரி பெண் உடல் கருகி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in