தனித்து விடப்பட்ட ஹர்திக் பாண்டியா; இதை செய்யாவிட்டால் மும்பை வெற்றி பெறாது... ஹர்பஜன் சிங் கவலை!

ரோகித் ஷர்மா ஹர்பஜன்சிங் ஹர்திக் பாண்டியா
ரோகித் ஷர்மா ஹர்பஜன்சிங் ஹர்திக் பாண்டியா

ஹர்திக் பாண்டியா தனித்து விடப்பட்டு இருக்கிறார். அந்த அணியின் வீரர்கள் அவரை கேப்டனாக ஏற்க வேண்டும், அனைவரும் ஒன்றாக செயல்பட வேண்டும். அங்கே நடப்பது நன்றாக இல்லை என அந்த அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு ஐந்துமுறை ஐபிஎல் கோப்பைகளை வென்று கொடுத்த ரோகித் ஷர்மா பதவியிலிருந்து நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா நடப்பு ஐபிஎல்-லில் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்த மாற்றத்தால் ரோகித் ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

ரோகித் ஷர்மா மீதுள்ள அன்பால் அவரின் ரசிகர்கள் இணையத்தில் ஹர்திக் பாண்டியாவை கடுமையாக திட்டி வருகின்றனர். மேலும் ஐபிஎல் மைதானத்திலும் ஹர்திக் பாண்டியாவை ரசிகர்கள் கேலி செய்யும் வீடியொக்களும் வெளிவந்துகொண்டிருக்கின்றன. மேலும் அணியில் ஹர்திக் பாண்டியாவுடன், ரோகித் ஷர்மா, பும்ரா, சூர்யகுமார் யாதவ் ஆகியோருக்கு பனிப்போர் நடப்பதாகவும் கூறப்படுகிறது.

ரோகித் ஷர்மா ஹர்திக் பாண்டியா
ரோகித் ஷர்மா ஹர்திக் பாண்டியா

இந்த நிலையில் 2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்து இருக்கிறது. எனவே ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி சரியில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது. அதே வேளையில் மும்பை அணிக்குள் நடக்கும் பனிப் போர் குறித்தும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து தனியார் தொலைக்காட்சியிடம் கருத்து தெரிவித்த ஹர்பஜன் சிங், "மும்பை இந்தியன்ஸ் அறையின் காட்சிகள் நன்றாக இல்லை. ஹர்திக் பாண்டியா தனித்து விடப்பட்டு இருக்கிறார். அந்த அணியின் வீரர்கள் அவரை கேப்டனாக ஏற்க வேண்டும், அனைவரும் ஒன்றாக செயல்பட வேண்டும். அந்த அணிக்காக நான் ஆடியவன் என்ற முறையில் சொல்கிறேன். அங்கே நடப்பது நன்றாக இல்லை" என்று கூறியுள்ளார்

மும்பை அணியின் சூழல் பற்றி பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து, "ஹர்திக் யாருடனும் பேச முடியாததால் மனமுடைந்து சோகமாக இருக்கிறார். அனைவரும் ஒன்றிணைந்து விளையாடும்போதுதான் அணி வெற்றிபெற முடியும் என்பதை மற்ற வீரர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதை செய்யாவிட்டால் மும்பை வெற்றி பெறாது” என தெரிவித்துள்ளார்.

அம்பத்தி ராயுடு
அம்பத்தி ராயுடு

இதுகுறித்து பேசிய மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடுவும், “ரோகித் ஷர்மா, பும்ரா ஆகியோர் பாண்டியாவை குழப்ப முயற்சி செய்கிறார்கள். இது வேண்டுமென்றே செய்யப்பட்டதா அல்லது தற்செயலானதா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அவரை குழப்பும் வகையில் அணியில் நிறைய பேர் உள்ளனர். டிரஸ்ஸிங் ரூமில் உள்ள பெரிய வீரர்கள் அவரை கேப்டனாக சுதந்திரமாக பணியாற்ற அனுமதிப்பதில்லை. எந்த கேப்டனுக்கும் இது நல்ல சூழ்நிலை இல்லை" என்று தெரிவித்துள்ளார்

இதையும் வாசிக்கலாமே...    

‘என்னது... நாடு தீப்பற்றி எரியுமா? இதுதான் ஜனநாயகத்தின் மொழியா?’ ராகுலுக்கு எதிராக குமுறும் மோடி

வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் ஸ்டாலின்... மு.க.அழகிரியின் மகன் உடல்நிலை பற்றி விசாரித்தார்!

முதல்வர் மாற்றம்... கேஜ்ரிவால் இல்லத்தில் குவியும் ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்கள்!

‘காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமிக்க காரணம் நேரு’ அமித் ஷா அடுத்த அட்டாக்

காதல் வலையில் சிக்கிய ஷாருக்கான் மகன்... பிரேசிலியன் நடிகையுடன் காதலா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in