இந்திய பவுலர்களில் அதிக விக்கெட்களை வீழ்த்தப்போவது இவர் தான்: கவுதம் கம்பீர் ஆரூடம்!

கவுதம் கம்பீர்
கவுதம் கம்பீர்

இந்தியாவில் நடைபெற்று வரும் சர்வதேச உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா தன்னுடைய முதல் 8 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வென்றுள்ளது. இதன் காரணமாக அரையிறுதிக்கும் முன்னேறியது. இந்நிலையில், கடந்த 2011-ம் ஆண்டு போல இந்தியா இம்முறையும் சொந்த மண்ணில் வெற்றிபெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

விராட் கோலி, ரோகித் ஷர்மா
விராட் கோலி, ரோகித் ஷர்மா

இத்தொடரில் கேப்டன் ரோகித் ஷர்மா, விராட் கோலி, ராகுல் போன்றவர்கள் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். ஆனால், அவர்களை விட ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், முகமது ஷமி ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களும் தங்களுடைய மிரட்டலான வேகத்தால் எதிரணிகளை அசால்டாக டீல் செய்து இந்தியாவுக்கு பெரிய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகின்றனர்.

குறிப்பாக முதல் 4 போட்டிகளில் அணியில் வாய்ப்பு அளிக்கப்படாத முகமது ஷமி, காயமடைந்த பாண்டியாவுக்கு பதிலாக விளையாடும் வாய்ப்பை பெற்றார்.

முகமது ஷமி
முகமது ஷமி

தான் விளையாடிய முதல் போட்டியிலேயே 5 விக்கெட்களை எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு உதவினார். அதிலும், உலகக் கோப்பை தொடரில் இந்தியாவிற்கு தண்ணி காட்டிய நியூசிலாந்தை தோற்கடிக்க முக்கியமான காரணமாக அவரது பந்துவீச்சு அமைந்தது. அதேபோல், இங்கிலாந்திற்கு எதிராக 4 விக்கெட், இலங்கைக்கு எதிராக 5 விக்கெட் என இந்த தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்திய இந்திய வீரராக என்ற மாபெரும் சாதனை படைத்தார்.

இந்நிலையில் இந்த உலகக்கோப்பையில் பும்ராவை விட ஷமி தான் அதிக விக்கெட்களை எடுத்து இந்தியா கோப்பையை வெல்ல உதவுவார் என இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

ஏனெனில் பும்ராவின் பந்து வீச்சை கவனமாக விளையாடும் எதிரணி வீரர்கள், ஷமியின் வீச்சில் ரன் குவிக்க முயற்சிப்பார்கள், அதனால், அவர் நிறைய விக்கெட்டுகளை வீழ்த்த வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். கிரிக்கெட்டில் ரன் அதிகம் விட்டுக்கொடுக்காத பந்துவீச்சாளர்கள் விக்கெட் எடுப்பது கடினம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

பயணிகள் அதிர்ச்சி! தீபாவளியையொட்டி... விமான கட்டணங்களிலும் கொள்ளை!

வைகை அணை திறப்பு… 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

ஐயப்பனுக்கு தங்க அங்கி..  சபரிமலையில் இன்று நடை திறப்பு!

ரூ.25,00,000 பரிசுத் தொகையை... தான் படித்த கல்லூரிகளுக்கு பிரித்துக் கொடுத்த வீரமுத்துவேல்... குவியும் பாராட்டுக்கள்!

செம ஹிட்டு... தீபாவளி கொண்டாட்டம்... 'ஜிகர்தண்டா2' படத்திற்கு முதல் ரிவியூ கொடுத்த பிரபலம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in