வயது முதிர்ந்தாலும், வலிகள் மிகுந்தாலும்... தோனியை பாராட்டி சென்னை அணியின் நெகிழ்ச்சி பதிவு!

தோனி
தோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை பாராட்டி அந்த அணியின் நிர்வாகம் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் தோல்வியடைந்ததன் மூலமாக சிஎஸ்கே அணி விளையாடிய 12 போட்டிகளில் 6 வெற்றி, 6 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.

தோனி
தோனி

நேற்றைய போட்டியில் தோல்வியடைந்தாலும், ஆட்டத்தின் இறுதியில் சிக்சர்களை பறக்கவிட்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளித்தார் மகேந்திர சிங் தோனி. குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான நேற்றையப் போட்டியில் எம்.எஸ்.தோனி 11 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் உட்பட 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதனால் சென்னை அணியில் நெட் ரன்ரேட் அதிகமாகி உள்ளது.

டெல்லி மற்றும் லக்னோ அணிகளை விடவும் சிஎஸ்கே அணிக்கு பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு பிரகாசமாக இருப்பதற்கும், டாப் 4ல் தொடர்வதற்கும் நெட் ரன் ரேட் மட்டுமே காரணமாக அமைந்துள்ளது. சிஎஸ்கே அணி 6 போட்டிகளில் தோல்வியடைந்த போது, நெட் ரன் ரேட் +0.419ஆக உள்ளது. இது 3வது இடத்தில் இருக்கும் ஐதராபாத் அணியை விடவும் அதிகமாகும்.

நேற்றைய போட்டியில் சிஎஸ்கே அணியின் தோல்வி நிச்சயம் என்ற போதும், தோனி கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி நெட் ரன் ரேட்டை உயர்த்தினார். இதுபோல பல போட்டிகளில் தோல்வியடைந்த போதும், ரன் வித்தியாசத்தை குறைத்தது தோனியின் இன்னிங்ஸ் தான். இதனால்தான் சிஎஸ்கே அணி பிளே ஆஃப் வாய்ப்பு தற்போதும் பிரகாசமாக இருப்பதாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், சிஎஸ்கே அணி நிர்வாகம் தரப்பில் தோனியைப் பாராட்டி எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘வயது முதிர்ந்த போதிலும்.. வலிகள் மிகுந்த போதிலும்...வலிமை குறைந்த போதிலும்.. வீரன் வாள் தரிப்பதை நிறுத்துவதில்லை!’ என தமிழில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த பதிவை தோனி ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

மகளிர் மல்யுத்தம்... பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார் நிஷா தஹியா!

மதுரையில் அதிர்ச்சி... காவல் ஆய்வாளர் வீட்டு கதவை உடைத்து 250 பவுன் நகைகள் கொள்ளை!

இங்கிலாந்தில் மன்னரைத் தொடர்ந்து இளவரசியும் மருத்துவமனையில் அனுமதி... பதறும் மக்கள்!

ஆந்திராவில் பண மழை... விபத்தில் சிக்கிய வேனிலிருந்து கட்டுக் கட்டாக கொட்டிய கோடிகள்!

லாரி மீது மோதி பற்றி எரிந்த கார்... மணமகன் உட்பட 4 பேர் உடல் கருகி உயிரிழந்த சோகம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in