ரூ.30 லட்சம் அபராதம்... ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் விளையாட ரிஷப் பந்த்துக்கு தடை!

ரிஷப் பந்த்
ரிஷப் பந்த்

ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்து வீசியதாக, டெல்லி கேப்பிடல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பந்த்துக்கு ரூ.30 லட்சம் அபராதமும், ஒரு போட்டியில் விளையாட தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா, கடந்த மார்ச் 22ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 8ம் தேதி அன்று, டெல்லி கேப்பிடல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் குவித்தது. டெல்லி தரப்பில் அதிகபட்சமாக அபிஷேக் பொரேல் 65 ரன்கள் எடுத்திருந்தார்.

ரிஷப் பந்த்
ரிஷப் பந்த்

அடுத்து 222 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 86 ரன்கள் எடுத்தார். டெல்லி தரப்பில் குல்தீப் யாதவ், முகேஷ் குமார், கலீல் அகமது தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். 4 ஓவரில் 25 ரன் மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்திய குல்தீப் யாதவ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

ஐபிஎல் கோப்பை
ஐபிஎல் கோப்பை

இந்த போட்டியில் வெற்றிப் பெற்று உற்சாகத்தில் இருக்கும் டெல்லி அணிக்கு ஐபிஎல் நிர்வாகம் ஷாக் கொடுத்துள்ளது. அதாவது, ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி மெதுவாக பந்து வீசிய புகாரில் இந்த நடவடிக்கையை ஐபிஎல் நிர்வாகம் எடுத்துள்ளது. இதில், கேப்டன் ரிஷப் பந்த்திற்கு ரூ.30 லட்சமும், அணியின் மற்ற வீரர்களுக்கு தலா ரூ.12 லட்சமும் அபராதம் விதித்துள்ளது. மேலும், ரிஷப் பந்த், ஐபிஎல் கிரிக்கெட்டில், ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

மகளிர் மல்யுத்தம்... பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார் நிஷா தஹியா!

மதுரையில் அதிர்ச்சி... காவல் ஆய்வாளர் வீட்டு கதவை உடைத்து 250 பவுன் நகைகள் கொள்ளை!

இங்கிலாந்தில் மன்னரைத் தொடர்ந்து இளவரசியும் மருத்துவமனையில் அனுமதி... பதறும் மக்கள்!

ஆந்திராவில் பண மழை... விபத்தில் சிக்கிய வேனிலிருந்து கட்டுக் கட்டாக கொட்டிய கோடிகள்!

லாரி மீது மோதி பற்றி எரிந்த கார்... மணமகன் உட்பட 4 பேர் உடல் கருகி உயிரிழந்த சோகம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in