ஹைதராபாத் அணியின் மிரட்டல் பந்துவீச்சு... 165 ரன்கள் மட்டுமே எடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஹைதராபாத் அணியின் மிரட்டல் பந்துவீச்சு... 165 ரன்கள் மட்டுமே எடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ்!

இன்றைய ஐபிஎல் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 165 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளது.

ஹைதராபாத் ராஜீவ்காந்தி மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் ஐபிஎல் லீக் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனை தொடர்ந்து சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரச்சின் ரவீந்திரா தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

அதிரடி ஆட்டக்காரரான ரச்சின் ரவீந்திரா புவனேஷ்வர் குமார் வீசிய 4-வது ஓவரில் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் சென்னை அணி ஆரம்பத்திலேயே ஆட்டம் கண்டது. தொடர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்த ருதுராஜ் 21 பந்துகளில் 26 ரன்களுடன் அவுட்டானார். 10 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்த சிஎஸ்கே 84 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது.

அதன்பின்னர் அஜிங்க்யா ரஹானே - ஷிவம் துபே ஜோடி சிறப்பாக விளையாடினார்கள். துபே 4 சிக்சர்களை விளாசி அதிரடி காட்டினார். ஆனால் பாட் கம்மின்ஸ் வீசிய பந்தில் 45 ரன்களில் ஆட்டமிழந்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ்
சென்னை சூப்பர் கிங்ஸ்

அவரைத் தொடர்ந்து ரஹானேவும் 30 ரன்களில் 35 ரன்களில் எடுத்து நடையை கட்டினார். 15 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி 127 ரன்களைச் சேர்த்திருந்தது. ரவீந்திர ஜடேஜா - டேரில் மிட்செல் இணை ஆடியது. மிட்செல் 13 ரன்களில் ஆட்டமிழக்க, இறுதியாக வந்த தோனி 1 ரன் எடுத்தார். ரவீந்திர ஜடேஜா 23 பந்துகளில் 31 ரன்களுடன் களத்தில் இருக்க, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த சிஎஸ்கே 165 ரன்களை சேர்த்தது.

ஹைதராபாத் அணி தரப்பில் புவனேஷ்வர் குமார், பாட் கம்மின்ஸ், ஜெயதேவ் உனத்கட், ஷஹபாஸ் அகமது, நடராஜன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். இதனை தொடர்ந்து ஹைதராபாத் அணி விளையாடி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...   

சாதி வாரி கணக்கெடுப்பு... இலவச கல்வி... ஏழை குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு!

கலக்கும் கருப்பையா... கலங்கும் துரைவைகோ... மலைக்கோட்டையில் மகுடம் யாருக்கு?

பெங்களூருவைத் தொடர்ந்து கேரளாவிலும் குண்டு வெடிப்பு... 2 பேர் படுகாயம்!

48 மணி நேரம் தான் டைம்: சந்திரபாபு நாயுடுவுக்கு கெடு விதித்த தேர்தல் ஆணையம்!

மத்திய அரசு அதிரடி அறிவிப்பு... இனி குழந்தையின் பிறப்பு பதிவேட்டில் இதுவும் கட்டாயம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in