சென்னை அணி தோல்விக்கு இதுதான் காரணம்: ருதுராஜ் கெய்க்வாட் சொல்கிறார்!

சிஎஸ்கே அணி
சிஎஸ்கே அணி

டெல்லிக்கு எதிரான போட்டியில் பவர் ஃபிளே ஓவர்களில் ரன்கள் சேர்க்க முடியாமல் திணறியதே தோல்விக்கு காரணம் என்று சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்துள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணி 20  ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 191 ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடிய வார்னர் 52 ரன்களும், ரிஷப் பந்த் 51 ரன்களும் சேர்த்தனர். 

இதன்பின் களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. இருப்பினும் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி கடைசி நேரத்தில் களமிறங்கி 16 பந்துகளில் 3 சிக்ஸ், 4 பவுண்டரி உட்பட 37 ரன்கள் சேர்த்தார். இது சென்னை அணி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. 

சிஎஸ்கே அணி
சிஎஸ்கே அணி

இந்த சீசனில் கேப்டன் பொறுப்பை ஏற்ற பின் ருதுராஜ் கெய்க்வாட் முதல்முறையாக தோல்வியைச் சந்தித்துள்ளார். இந்த தோல்வி குறித்து அவர் கூறுகையில், "முதல் 6 ஓவர்களுக்கு பின் எங்களது அணியின் பவுலர்கள் நல்ல கம்பேக்  கொடுத்தார்கள். அவர்களை 190 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும். இந்த பிட்சில் முதல் இன்னிங்ஸின்போது பேட்டிங்கிற்கு கொஞ்சம் சாதகமாக இருந்தது. ஆனால், 2வது இன்னிங்ஸின்போது பிட்சில் கொஞ்சம் ஸ்விங் இருந்தது.

ரச்சின் ரவீந்திரா கொஞ்சம் கூடுதலாக பந்துகளை மிஸ் செய்தார். அதற்கு பிட்சில் கூடுதல் மற்றும் ஸ்விங் இருந்ததே காரணம். அதுதான் தோல்விக்கு முக்கிய காரணமாக  அமைந்தது. இருப்பினும் முதல் பாதிக்கு பின் இலக்கை எட்டிவிடலாம் என்று நினைத்தோம். ஆனால் பவர் ஃபிளே ஓவர்களில் சொதப்பியது பின்னடைவாக
இருந்தது. 

நாங்கள் இலக்கைத் துரத்த வேண்டிய தேவையில் இருந்து கொண்டே விளையாடினோம். டெல்லி பேட்டிங்கின்போது முதல் 4 ஓவர்களை நன்றாக வீசினோம். பவர் ஃபிளேவின் கடைசி 2 ஓவர்கள் கொஞ்சம் கூடுதலாக ரன்கள் சென்றது. 2 வெற்றிகளுக்கு பின் ஒரு தோல்வி வருவது சகஜம்தான். அதனால் கவலைப்பட தேவையில்லை" என்று கூறினார்.

இதையும் வாசிக்கலாமே...    


வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்தது... மாதத்தின் முதல் நாளில் மகிழ்ச்சி!

வருமான வரி செலுத்துவோர் கவனத்திற்கு... புதிய நிதி ஆண்டு இன்று தொடக்கம்!

தமிழக பாஜக அலுவலகம் குற்றவாளிகளின் சரணாலயம்... அமைச்சர் மனோ தங்கராஜ் தாக்குதல்!

பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம்... ஏப்ரல் 9-ம் தேதி சென்னை வருகிறார்!

ஒரே நேரத்தில் ஏவப்பட்ட 23 செயற்கைக்கோள்கள்... ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சாதனை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in