தமிழக பாஜக அலுவலகம் குற்றவாளிகளின் சரணாலயம்... அமைச்சர் மனோ தங்கராஜ் தாக்குதல்!

அமைச்சர் மனோ தங்கராஜ்.
அமைச்சர் மனோ தங்கராஜ்.

தமிழ்நாடு பாஜக அலுவலகமான கமலாலயம், குற்றவாளிகளின் சரணாலயம் என்று தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் அமைச்சர் மனோ தங்கராஜ் கடும் விமர்சனம் செய்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதன்படி பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே வெளியாக உள்ளன. இதற்காக தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளிலும் தேர்தல் பரப்புரையில் வேகம் காட்டி வருகின்றன.

 எடப்பாடி பழனிசாமி பிரசாரம்
எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

தமிழகத்தில் திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும் போட்டியிடுகின்றன. அதிமுக கூட்டணியில் இருந்து கழட்டி விடப்பட்ட பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்கிறது. நாம் தமிழர் கட்சி 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது.

அமைச்சர் மனோ தங்கராஜ்.
அமைச்சர் மனோ தங்கராஜ்.

இந்த நிலையில் கோடை வெப்பத்தை விட தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பாஜகவை கடுமையாக சாடியுள்ளார்.

அதில், “கமலாலயம் குற்றவாளிகளின் சரணாலயம். சிறைச்சாலைகளில் இருக்க வேண்டியவர்கள் கமலாலயத்தில் இருக்கிறார்கள். கலவரத்தை உருவாக்குபவர்கள் கமலாலயத்தில்! பாலியல் வன்புணர்வார்கள் கமலாலயத்தில்! மதவெறியைத் தூண்டுகிறவர்கள் கமலாலயத்தில்!

குண்டு வெடிப்பு குற்றவாளிகள் கமலாலயத்தில்! குண்டு தயாரிப்பாளர்களும் கமலாலயத்தில்! ஊழல்வாதிகள் கமலாலயத்தில்! போலி செய்திகளைப் பரப்புபவர்கள் கமலாலயத்தில்! வெறுப்பு பிரசாரம் செய்பவர்கள் கமலாலயத்தில்! மொத்தத்தில் பாஜகவின் கமலாலயம் குற்றவாளிகளின் சரணாலயம்” என்று பதிவிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in