பந்துவீச தாமதம்... சிஎஸ்கே, லக்னோ கேப்டன்களுக்கு தலா ரூ. 12 லட்சம் அபராதம்!

ருதுராஜ் - கே.எல்.ராகுல்
ருதுராஜ் - கே.எல்.ராகுல்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னையும், லக்னோ அணியும் நேற்று மோதின. இதில் இரு அணிகளும் பந்து வீசுவதற்கு கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டதால், 2 கேப்டன்களுக்கும் தலா 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

ஐபிஎல் கிரிக்கெட்டின் 17-வது சீசன் நடந்து வருகிறது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ அணியும் நேற்று ஆக்ரோஷமாக மோதின. இதில், முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 177 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 57, ரகானே 36, மொயின் அலி 30, எம்எஸ் தோனி 28 ரன்கள் எடுத்தனர். அடுத்ததாக ஆடத் தொடங்கிய லக்னோ அணி, 19 ஓவர்களில் 177 ரன்களை எடுத்து சென்னை அணியை அசால்டாக காலி செய்தது.

இந்தத் தொடரில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 4-வது வெற்றியை பதிவு செய்த லக்னோ, புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இப்போட்டியில் முதலில் பந்து வீசிய லக்னோ நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் 20 ஓவர்களை வீசி முடிக்கவில்லை. அதனால் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுலுக்கு இப்போட்டியின் சம்பளத்திலிருந்து ரு.12 லட்சம் அபராதமாக விதித்து ஐபிஎல் நிர்வாகம் அதிர்ச்சி கொடுத்தது. இந்த தவறை முதல் முறை செய்துள்ளதால் கேப்டன் கே.எல்.ராகுலுக்கு அபராதம் விதிக்கப்படுவதாக ஐபிஎல் தெரிவித்துள்ளது.

ருதுராஜ் - கே.எல்.ராகுல்
ருதுராஜ் - கே.எல்.ராகுல்

அதேபோல லக்னோவுக்கு எதிராக சென்னை அணியும் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் 20 ஓவர்களை வீசி முடிக்கவில்லை. அதனால் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்ட்வாட்டுக்கும் 12 லட்சம் அபராதம் விதிக்கப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த சீசனில் சென்னை அணியும் முதல் முறையாக இந்த தவறை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

வாக்காளர்களுக்கு இடையூறு... நடிகர் விஜய் மீது போலீஸில் புகார்!

என் மகனுக்கு தர்ற தண்டனை ஒரு பாடமாக இருக்க வேண்டும்... மாணவி கொலை வழக்கில் குற்றவாளியின் தந்தை கதறல்!

நடுவானில் வெடித்துச் சிதறிய ஹெலிகாப்டர்... ராணுவ தளபதி உட்பட 10 பேர் பலி!

உஷார்... வேகமெடுக்கும் பறவைக் காய்ச்சல்... தமிழக எல்லைகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்!

பாகிஸ்தானிலிருந்து பஞ்சாப் எல்லையில் நுழைய முயன்ற ட்ரோன்; பிஎஸ்எஃப் அதிரடி நடவடிக்கை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in