கால்பந்து நீல நிற அட்டை
கால்பந்து நீல நிற அட்டை

கால்பந்தாட்டப் போட்டியில் நீல அட்டை... ஆட்சேபிக்கும் ஃபிஃபா!

கால்பந்தாட்டங்களில் நீல நிற அட்டையை பரீட்சார்த்த முறையில் சோதித்துப் பார்க்க கால்பந்தாட்ட விதிமுறைகள் குழு திட்டமிட்டுள்ளது.

ஃபிஃபா
ஃபிஃபா

உலக அளவில் அதிகமான ரசிகர்களைக் கொண்ட விளையாட்டு என்றால் அது கால்பந்தாட்டம் தான். சர்வதேச அளவிலான போட்டிகளில் மற்ற விளையாட்டில் இல்லாத அளவுக்கு ஆக்ரோஷமும், சச்சரவுகளும் இந்த போட்டியின் போது ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். அதனாலேயே, போட்டியில் தேவையற்ற சர்ச்சையில் ஈடுபடும் வீரர்களைக் கட்டுப்படுத்த மஞ்சள் மற்றும் சிவப்பு அட்டைகள் மூலம் சில விதிமுறைகள் கொண்டு வரப்பட்டது.

சிவப்பு அட்டை
சிவப்பு அட்டைMatthew Ashton - AMA

ஆட்டத்தின் போது ஒரு அணியின் வீரர் எதிரணி வீரருடன் மோதலில் ஈடுபட்டால், அதன் தன்மையைப் பொறுத்து நடுவர் மஞ்சள் அட்டையைக் கட்டுவார். இதன் மூலம் அவருக்கு எச்சரிக்கை கொடுக்கப்படும். இரண்டாவது முறையும் அந்த வீரர் மஞ்சள் அட்டையைப் பெற்றால், அந்த ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்படுவார். ரெட் கார்டு எனப்படும் சிவப்பு அட்டையைப் போட்டியின் போது ஒரு வீரர் பெற்றால், உடனடியாக அந்த போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவார்.

மஞ்சள் அட்டை
மஞ்சள் அட்டை

இந்தச் சூழலில், சர்வதேச கால்பந்து விதிமுறைகள் குழுவானது இந்த இரண்டு அட்டைகளுடன் மூன்றாவதாக நீல அட்டையையும் சர்வதேச போட்டிகளில் பரீட்சார்த்த முறையில் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது.

அதாவது சர்வதேச அளவிலான 2 மற்றும் 3-ம் தரப் போட்டிகளில் இதனைப் பரிசோதித்துப் பார்க்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி போட்டியில் தவறு செய்தமைக்காக ஒரு வீரருக்கு நீல அட்டை காட்டப்பட்டால், அவர் 10 நிமிடங்களுக்கு மைதானத்திற்கு வெளியே இருப்பார். ஒரு போட்டியில் இரண்டு நீல அட்டைகளை ஒருவர் பெற்றால், சிவப்பு அட்டை வழங்கி விலக்கப்படுவார்.

ஒரு நீலம் மற்றும் மஞ்சள் அட்டையைப் பெற்றாலும் சிவப்பு அட்டை வழங்கப்படும். 1970 உலகக் கோப்பையில் மஞ்சள் மற்றும் சிவப்பு அட்டைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதன் பிறகு மூன்றாவதாக இன்னொரு அட்டை அறிமுகப்படுத்தப் படுவது இப்போதுதான்.

கால்பந்தாட்டத்தில் நேர்மையான விளையாட்டை ஊக்குவிக்க நீல அட்டை முறை கொண்டுவரப்படுவதாக விதிமுறைகள் குழு கூறினாலும், சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான ஃபிஃபா இது சரியான முடிவு அல்ல என எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ரசிகர்களும் இந்த முறைக்குக் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...


கடன் தீர்க்கும்... அமாவாசை தினத்தில் இந்த மந்திரத்தைச் சொல்ல மறக்காதீங்க!

சென்னையில் பல இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை!

சட்டவிரோத மதரஸா, மசூதி இடிப்பு: துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி; 250 பேர் படுகாயம்!

பிப்ரவரி 21ம் தேதி வரை நெல்லை வழிதடத்தில் இந்த எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து!

என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு... வீல்சேரில் அமர்ந்திருக்கும் புகைப்படத்துடன் ரஜினிகாந்த் நெகிழ்ச்சி!

x
காமதேனு
kamadenu.hindutamil.in