தொடர் தோல்வியில் பாகிஸ்தான் - பாபர் அசாமின் கேப்டன் பொறுப்புக்கு ஆபத்து!

பாபர் அசாம்
பாபர் அசாம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து பாபர் அசாம் நீக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி படுதோல்வியை சந்தித்து வருகிறது. இதுவரை விளையாடியுள்ள 5 போட்டிகளில் 3 தோல்வியும், இரண்டில் வெற்றியும் பெற்றுள்ளது. அதிலும் கடைசியாக நடைபெற்ற இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான 3 போட்டிகளிலும் தொடர் தோல்வியை சந்தித்துள்ளது. நாளை நடைபெற உள்ள போட்டியில் பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்க அணியுடன் மோதுகிறது. இந்த போட்டியில் தோல்வியடைந்தால் அரையிறுதி போட்டிக்கான ரேஸில் இருந்து அந்த அணி வெளியேறும்.

இந்நிலையில், அந்த அணியின் தோல்வியால் கவலையடைந்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அணியில் அதிரடி மாற்றங்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. அதில் முதலாவதாக பாபர் அசாமை கேப்டன் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, சர்பராஸ் அஹமது அல்லது முகமது ரிஸ்வானை ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு கேப்டனாக நியமிக்க ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

பாபர் அசாம்
பாபர் அசாம்

தற்போதைய சூழலில் இனி வரும் 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு தகுதி பெற முடியும் என்ற நிலையில், அதற்கான சாத்தியங்களும் மிக குறைவாகவே உள்ளது. ஏனெனில், சிறப்பாக ஆடி வரும் நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற அணிகளை வீழ்த்துவது அவ்வளவு எளிதானது அல்ல என்ற சூழலில் பாபர் அசாம் அணியின் வெற்றிக்கும், தனது கேப்டன் பதவியை காப்பாற்றிக்கொள்ளவும் கடுமையாக போராட வேண்டியிருக்கும் என்பது நிதர்சனம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in