மிஸ்பண்ணாதீங்க மக்களே! ஆவின் நிறுவனத்தின் தீபாவளி காம்போ ஆஃபர் அறிவிப்பு!

மிஸ்பண்ணாதீங்க மக்களே! ஆவின் நிறுவனத்தின் தீபாவளி காம்போ ஆஃபர் அறிவிப்பு!

தீபாவளி பண்டிகை விற்பனைக்காக ஆவின் நிறுவனம் பல்வேறு காம்போ ஆஃபர்களை அறிவித்துள்ளது.

நவம்பர் 12-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், ஆடைகள், பட்டாசு, இனிப்பு என நாடு முழுவதும் கடைகளில் விற்பனை களைகட்டியுள்ளது. இந்நிலையில், தீபாவளிக்காக ஆவின் நிறுவனம் சூப்பர் சேவர் காம்போ என்று தள்ளுபடி விலையில் இனிப்புகளை விற்பனை செய்ய உள்ளது.

அதாவது மைசூர்பாகு 250 கிராம், மிக்சர் 200 கிராம், ஆவின் பிஸ்கட் 80 கிராம், 10 ரூபாய் சாக்லேட் -1 ஆகியவை அடங்கிய காம்போ 325 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலையில் தீபாவளிக்காக 25 ரூபாய் குறைக்கப்பட்டு 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதே போல் நெய் பாதுஷா 250 கிராம், பாதாம் மிக்ஸ் 200 கிராம், குலாப் ஜாமூன் 200 கிராம், 10 ரூபாய் சாக்லேட் -1 அடங்கிய காம்போ 525 ரூபாய்க்கு பதிலாக 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காஜு பிஸ்தா ரோல் 250 கிராம், காஜூ கட்லி 250 கிராம், நெய் பாதுஷா 250 கிராம், நட்ஸ் அல்வா 250 கிராம், அடங்கிய காம்போ 965 ரூபாய்க்கு பதிலாக 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்.

அதாவது, தீபாவளி பண்டிகைக்காக சிறப்பு இனிப்பு தொகுப்பு 25 ரூபாய் முதல் 65 ரூபாய் வரை தள்ளுபடி விலையை அறிவித்துள்ளது ஆவின் நிறுவனம். பொதுமக்கள் அரசு நிறுவனமான ஆவினில் இனிப்புகளை வாங்க ஊக்குவிக்கும் வகையில் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in