ரிஷப் பந்த் விளையாட தடை.. டெல்லி அணிக்கு புதிய கேப்டன் நியமனம்!

ரிஷப் பந்த்
ரிஷப் பந்த்

டெல்லி கேப்பிடல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பந்த்திற்கு ஒரு போட்டியில் விளையாட தடையும் விதிக்கப்பட்டுள்ளதால், நாளை ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் அக்சர் படேல் கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 8ம் தேதி அன்று, டெல்லி கேப்பிடல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில், முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் குவித்தது. அடுத்து 222 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் பந்து வீசுவதற்கு டெல்லி அணி அதிக நேரம் எடுத்துக் கொண்டது. அதனால், டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த்திற்கு ரூ.30 லட்சமும், அணியின் மற்ற வீரர்களுக்கு தலா ரூ.12 லட்சமும் அபராதம் விதித்தது.

டெல்லி அணி
டெல்லி அணி

மேலும், ரிஷப் பந்த், ஐபிஎல் கிரிக்கெட்டில், ஒரு போட்டியில் விளையாட தடை விதித்தது. அதனால், நாளை ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் ரிஷப் பந்த் பங்கேற்வில்லை என்று அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதனால், டெல்லி அணிக்கு யாரை கேப்டனாக நியமிக்கலாம் என்று அணி நிர்வாகம் ஆலோசித்தது. பின்னர், நாளை நடக்கும் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணியின் கேப்டனாக அக்சர் படேல் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரிக்கி பாண்டிங்
ரிக்கி பாண்டிங்

இதுகுறித்து டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணியின் கேப்டனாக அக்சர் படேல் செயல்படுவார். கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக டெல்லி அணியின் துணை கேப்டனாக அக்சர் படேல் செயல்பட்டு வந்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் ஏராளமான அனுபவம் அவருக்கு உள்ளது. அவரின் தலைமையில் டெல்லி அணி விளையாடுவதை பார்க்க ஆர்வமாக இருக்கிறேன். 2 நாட்களுக்கு முன்பாகவே ரிஷப் பந்த் தடை தொடர்பாக ஆலோசனை நடத்தினோம். அப்போதே அக்சர் படேலை தயாராக இருக்கும்படி கூறிவிட்டோம்" என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

மகளிர் மல்யுத்தம்... பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார் நிஷா தஹியா!

மதுரையில் அதிர்ச்சி... காவல் ஆய்வாளர் வீட்டு கதவை உடைத்து 250 பவுன் நகைகள் கொள்ளை!

இங்கிலாந்தில் மன்னரைத் தொடர்ந்து இளவரசியும் மருத்துவமனையில் அனுமதி... பதறும் மக்கள்!

ஆந்திராவில் பண மழை... விபத்தில் சிக்கிய வேனிலிருந்து கட்டுக் கட்டாக கொட்டிய கோடிகள்!

லாரி மீது மோதி பற்றி எரிந்த கார்... மணமகன் உட்பட 4 பேர் உடல் கருகி உயிரிழந்த சோகம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in