ஆனைக்கட்டி கல்லை பாதுகாக்கும் அசூர் மக்கள்; பத்தடி உயர தொன்மையான கல்வெட்டு சொல்வது என்ன?

ஆனைக்கட்டி கல்லுடன் ஊர் மக்கள்
ஆனைக்கட்டி கல்லுடன் ஊர் மக்கள்

பெரம்பலூர் அருகே அசூர் கிராமத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள பத்தடி உயர தொன்மையான கல்லில் பொறிக்கப்பட்டுள்ள செய்தி குறித்து அறிந்துகொள்ள கிராம மக்கள் ஆர்வமாக உள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அசூரில் பழமையான சிவாலயம் ஒன்று உள்ளது. அதன் கல்வெட்டுகளின்படி, இந்த கோயில் முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில், கி.பி 11-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது எனத் தெரிய வருகிறது. இங்குள்ள ஐயனார் கோயில் மந்தைவெளியில், தரையிலிருந்து பத்தடி உயரம் உடைய கல் ஒன்று பல நூற்றாண்டுகளாக வீற்றிருக்கிறது.

அசூர் ஆனைக்கட்டி கல்
அசூர் ஆனைக்கட்டி கல்

இந்த கல் குறித்தும் அது எப்போது நடப்பட்டது என்பது உள்ளிட்ட அதன் பின்னணி குறித்தும் அறிந்துகொள்ள ஊர் மக்கள் ஆர்வமாக உள்ளனர். ஆனால் ஊரின் மூத்த தலைமுறையினர் உட்பட எவருக்கும் அது குறித்தான விவரங்கள் தெரியவில்லை. மூதாதையர்கள் தெரிவித்த தகவலின்படி, பல தலைமுறைகளாக இந்த கல் அங்கே நிற்பது தவிர்த்து கூடுதல் தகவல்கள் இவர்களிடம் இல்லை.

மேலும் ஊர் மக்கள் மத்தியில் இந்த கல் ஆனைகட்டிக்கல் என்ற பெயரில் வழங்கப்படுகிறது. போர் மற்றும் திருவிழா காலங்களில் ஊருக்கு வருகைதரும் யானைகளை கட்டிவைத்ததால் ஆனைக்கட்டி கல் என பெயர் பெற்றிருக்கலாம் என்றும் சில தெரிவிக்கின்றனர். ஊரின் அடையாளமாக நிற்கும் இந்த கல்லின் ஒரு பக்கம் எண்ணெய் பூசப்பட்டு கருப்புத்துண்டு சுற்றி பல காலமாக வழிபட்டும், பாதுகாத்தும் வருகிறார்கள். கோயில் வழிபாட்டு தினங்களில் இந்த கல்லுக்கும் சேர்த்தே மரியாதை செய்கின்றனர்.

கல்லின் ஒரு பக்கத்தில் கல்வெட்டு எழுத்துக்கள் நிறைந்திருக்கின்றன. ஆண்டுகணக்கில் வெட்டவெளியில் நிற்பதாலும், எண்ணெய் பூசப்பட்டதாலும் கல்வெட்டு எழுத்துக்கள் தெளிவின்றி தென்படுகின்றன. இந்த கல்லின் பின்னணி என்ன, கல்லுக்கும் ஊருக்குமான தொடர்பு என்ன, கல்லில் அமைந்துள்ள கல்வெட்டு எழுத்துக்கள் சொல்லும் சேதி என்ன என்பதை எல்லாம் அறிந்துகொள்ள அசூர் மக்கள் ஆர்வமாக உள்ளனர்.

ஆனைக்கட்டி கல் அருகே ஊட்டி செல்லப்பிள்ளை மற்றும் ரமேசு கருப்பையா
ஆனைக்கட்டி கல் அருகே ஊட்டி செல்லப்பிள்ளை மற்றும் ரமேசு கருப்பையா

பெரம்பலூர் மாவட்டத்தின் பல ஊர்களில் ஆடு, மாடுகள் உரசிக் கொள்வதற்காக ஐந்தடி உயரத்திற்கு ’ஆவுறிஞ்சி’ கற்கள் உள்ளன. ஆனால் அசூரில் அமைந்திருக்கும் கல் அவற்றிலிருந்து மாறுபட்டு 10 அடிக்கு மேலான உயரத்தில் கல்வெட்டு எழுத்துகளுடன் காணப்படுவது வியப்பளிக்கிறது. சூழலியல் செயற்பாட்டாளர் ரமேசு கருப்பையா, ஊர் பிரமுகர் ஊட்டி செல்லப்பிள்ளை ஆகியோர் முயற்சியால் இந்த கல் குறித்தான தகவல்கள் வெளியுலகை எட்டியுள்ளன.

இதையும் வாசிக்கலாமே...

உலகின் நெ.1 கார்ல்சனை வீழ்த்திய தமிழர்.. இளம் சாதனையாளருக்கு குவியும் பாராட்டு!

மீண்டும் வெடித்து சிதறிய வால்நட்சத்திரம்... பூமியை நெருங்கும் ஆபத்து!

லியோ’ விமர்சனம் : இதெல்லாமே பெரிய சறுக்கல்... புலம்பும் ரசிகர்கள்!

வாசகர்களுக்கு ரூ.5,00,000 பரிசு... கவிஞர் வைரமுத்து அறிவிப்பு!

அதிர்ச்சி... ரூ.1,000 கோடி மதிப்புள்ள ஜவுளிகள் தேக்கம்! கதறும் நெசவாளர்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in