வீட்டு மின்கட்டணத்தை பூஜ்ஜியமாக்கும் சூரிய மின்சக்தி வசதி; மோடி 3.0 ஆட்சியில் காத்திருக்கும் மேஜிக்

பிரதமர் மோடி - வீடுதோறும் சூரிய மின் திட்டம்
பிரதமர் மோடி - வீடுதோறும் சூரிய மின் திட்டம்

’ஒவ்வொரு வீட்டின் மின் கட்டணமும் பூஜ்ஜியமாக இருக்க வேண்டும், உபரி மின்சாரத்தை விற்று இந்தியா பணம் சம்பாதிக்க வேண்டும், எரிசக்தி துறையில் நாடு தன்னிறைவு அடைய வேண்டும்’ என்பதையெல்லாம் தான் அடுத்து பொறுப்பேற்கும் ஆட்சியில் நிறைவேற இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கான பலகட்ட வாக்குப்பதிவுகளுக்கு மத்தியில் பிரதமர் மோடி ஊடகப் பேட்டிகளுக்கு முக்கியத்துவம் தந்து வருகிறார். ’பத்திரிக்கையாளர்களை சந்திப்பதில்லை, பேட்டிகள் அளிப்பதில்லை’ என்று மோடி மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவதை பொய்யாக்கும் வகையில், தேர்தல் நெருக்கத்தில் அதிக எண்ணிக்கையில் பிரதமரின் பேட்டிகள் வெளியாகி வருகின்றன.

சோலார் பேனல்கள்
சோலார் பேனல்கள்

அவற்றில் ஒன்றாக மோடி தலைமையிலான மூன்றாம் ஆட்சியில் நிகழப்போகும் ஒரு மேஜிக் மாற்றம் குறித்து பேட்டி ஒன்றில் பிரதமர் விளக்கி உள்ளார். சாமானியர்களை அச்சுறுத்தும் மின்கட்டணம் பிரச்சினைக்கு தீர்வளிக்கும் வகையில் அவர் தனது சூரிய மின் திட்டம் குறித்து விவரித்துள்ளார்.

’பிரதம மந்திரி சூர்யா கர் முஃப்ட் பிஜிலி யோஜனா’ திட்டத்தை செயல்படுத்துவதே தனது அடுத்தக்கட்ட இலக்கு என்றும் அந்த பேட்டியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ’ஒவ்வொரு வீட்டின் மின் கட்டணம் என்பது பூஜ்ஜியமாக இருக்க வேண்டும்; இந்தியா உபரி மின்சாரத்தை விற்று பணம் சம்பாதிக்க வேண்டும்; மேலும் நாடு எரிசக்தி துறையில் தன்னிறைவு பெற வேண்டும்’ என்பதையெல்லாம் தனது கனவுகளாக அவர் தெரிவித்துள்ளார்.

”எலெக்ட்ரிக் வாகனங்களின் சகாப்தம் தொடங்கி விட்டது. ஸ்கூட்டர் அல்லது கார் வைத்திருக்கும் ஒவ்வொரு நபரும் சூரிய சக்தியைப் பயன்படுத்தி வீட்டிலேயே சார்ஜ் செய்யும் திறனைப் பெறப்போகிறார்கள். அதாவது ஒரு நபருக்கு மாதத்திற்கு ரூ1000 முதல் 2000 வரையிலான போக்குவரத்துச் செலவு பூஜ்ஜியமாக மாறப் போகிறது. இது குடிமக்களுக்கும், நாட்டுக்கும் நன்மை பயக்கும். பெட்ரோலியம் இறக்குமதிக்காக செலவிடப்படும் பில்லியன் டாலர்கள் மிச்சமாகும்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

சூரிய மின் திட்டத்துக்கான இந்திய தயாரிப்புகளை பார்வையிடும் பிரதமர் மோடி -கோப்பு படம்
சூரிய மின் திட்டத்துக்கான இந்திய தயாரிப்புகளை பார்வையிடும் பிரதமர் மோடி -கோப்பு படம்

10 மில்லியன் வீடுகளுக்கு சூரிய ஒளி கூரைகளை நிறுவுவதற்காக ரூ75,000 கோடி முதலீட்டில் ’சூர்யா கர்: முஃப்ட் பிஜிலி யோஜனா’ திட்டத்தை பிப்ரவரியில் மோடி தொடங்கினார். இந்த திட்டம் மூலம் மாதந்தோறும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்புவோர் தங்கள் மாநிலத்தின் மின் விநியோக நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்து அதன் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். பின்னர் தங்களது மின் நுகர்வோர் எண், மொபைல் எண் மற்றும் மின்னஞ்சலை உள்ளிட்டு, அங்கு விரியும் படிவத்தை பூர்த்தி செய்து சூரிய மின் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பம் உரிய பரிசீலனைக்கு பின்னர் மானிய அடிப்படையிலான திட்டத்துக்கு தேர்வு செய்யப்படும். உரிய மானியத்தொகை அடுத்த 30 நாட்களுக்குள் பயனாளரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

இதையும் வாசிக்கலாமே...

கடந்த 6 மாதங்களில் 31 சதவீத மசாலாக்கள் நிராகரிப்பு; இந்தியாவின் மசாலாக்களை ஆராயும் அமெரிக்கா!

நடிகர் பிரகாஷ்ராஜ்க்கு 'அம்பேத்கர் சுடர் விருது'... விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு!

பகீர்... ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணியைக் காப்பாற்றிய பெண் போலீஸ்: பதற வைக்கும் வீடியோ வைரல்!

உளவுத் துறை எச்சரிக்கை: நாடு முழுவதும் அமலாக்கத் துறை அலுவலகங்களுக்கும் சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு!

முதல் மதிப்பெண் எடுக்காமலேயே இருந்திருக்கலாம்... உருவ கேலிக்குள்ளான மாணவி வேதனை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in