பகீர்... ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணியைக் காப்பாற்றிய பெண் போலீஸ்: பதற வைக்கும் வீடியோ வைரல்!

ரயிலில் இருந்து விழுந்த பயணியை மீட்க ஓடும் பெண் போலீஸ்.
ரயிலில் இருந்து விழுந்த பயணியை மீட்க ஓடும் பெண் போலீஸ்.

ஓடும் ரயிலில் ஏறும் போது தவறி விழுந்த பயணியை பெண் காவலர் காப்பாற்றும் பரபரப்பான வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தராகாண்ட் மாநிலத்தில் உள்ள லஸ்கர் ரயில் நிலையத்தில் கொல்கத்தா-ஜம்மு தாவி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று சென்று கொண்டிருந்தது. அப்போது ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணி ஒருவர் திடீரென அந்த ரயிலைப் பிடிக்க ஓடினார். சட்டென ரயிலைப் பிடித்த அவர் நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையே விழுந்தார்.

பயணியை மீட்ட  ரயில்வே பெண் போலீஸ்.
பயணியை மீட்ட ரயில்வே பெண் போலீஸ்.

இதைக் கவனித்த ரயில்வே பெண் போலீஸ்காரரான உமா, உடனடியாக ஓடிச் சென்று அந்த பயணியின் கைகளை இழுத்துப் பிடித்துக் கொண்டார். அப்போது தண்டவாளத்தில் ரயில் வேகமாக சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் ரயிலில் ஏறிய பயணி விழுந்து விட்டதைப் பார்த்த சக பயணிகள், ரயிலின் செயினைப் பிடித்து இழுத்தனர். இதனால் ரயில் நின்றது.

இதன் பின் அந்த பயணியை பெண் காவலருடன் சேர்ந்து பயணிகள் காப்பாற்றினர். ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணிக்கு நல்வாய்ப்பாக பலத்த காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. இந்த காட்சி அங்கிருந்து சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ரயிலில் பயணம் செய்த பயணி, உணவு மற்றும் பழச்சாறு வாங்க இறங்கியதாவும், உணவு வாங்கிக் கொண்டு ரயிலில் ஏறும் போது தவறி விழுந்ததாக ரயில்வே போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்தது.

இந்த சம்பவத்திற்குப் பிறகு கொல்கத்தா-ஜம்மு தாவி எக்ஸ்பிரஸ் ரயில் ஐந்து மணி நேரம் தாமதமாக லக்ஷார் ரயில் நிலையத்தை அடைந்தது. ரயிலில் இருந்து விழுந்த பயணியை சமயோஜிதமாக காப்பாற்றிய ரயில்வே பெண் காவலர் உமாவிற்கு பயணிகள் நன்றி தெரிவித்தனர்.

இதையும் வாசிக்கலாமே...


ஓரம்போ... ஓரம்போ... மத்திய அமைச்சர் வண்டி வருது... டூவீலரில் வாக்குசேகரிக்கும் ஸ்மிருதி இரானி!

தேர்தல் நேரத்தில் திடீர் அதிர்ச்சி... பாஜக எம்.பி காலமானார்!

தேவகவுடாவுக்கு முற்றும் சிக்கல்; பேரனைத் தொடர்ந்து மகன் மீதும் பாலியல் வழக்குப்பதிவு!

அடுத்த அதிர்ச்சி... ஈரோடு ஸ்டிராங் ரூமில் கேமிரா பழுது; வாக்கு எண்ணிக்கை என்னாகும்?!

பயங்கரம்... கழுத்தை அறுத்து சித்த மருத்துவர், அவரது மனைவி கொடூரக் கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in