இந்தியாவில் இஸ்லாமியர்களின் ஷரியா சட்டத்தை அமல்படுத்தப் பார்க்கிறது காங்கிரஸ்... யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு

தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் யோகி ஆதித்யநாத்
தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் யோகி ஆதித்யநாத்

‘இந்தியாவில் இஸ்லாமியர்களின் ஷரியா சட்டத்தை அமல்படுத்தப் பார்க்கிறது காங்கிரஸ் கட்சி’ என்று குற்றம்சாட்டியுள்ளார் உத்தரபிரதேச முதல்வரும், பாஜகவின் செல்வாக்கான தலைவர்களில் ஒருவருமான யோகி ஆதித்யநாத்.

’காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில், நாட்டில் 'ஷரியா சட்டத்தை' அமல்படுத்தவும், மக்களின் சொத்துக்களை மறுபங்கீடு செய்யவும் உறுதி காட்டியுள்ளது’ என யோகி ஆதித்யநாத், காங்கிரஸ் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இன்றைய தினம் உபி மாநிலம் அம்ரோஹாவில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரக் கூட்டத்தில் பேசும்போது யோகி ஆதித்யநாத் இவ்வாறு தெரிவித்தார்.

பிரதமர் மோடி உடன் முதல்வர் யோகி
பிரதமர் மோடி உடன் முதல்வர் யோகி

“காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் நாட்டுக்கு துரோகம் இழைத்துவிட்டு, மீண்டும் ஒரு முறை பொய்யான தேர்தல் அறிக்கையுடன் உங்களிடம் வந்துள்ளனர். காங்கிரஸின் தேர்தல் அறிக்கையைப் பார்த்தால், அதிலுள்ள அதிர்ச்சிகள் புரியும். காங்கிரஸ் ஆட்சி அமைத்தால், ஷரியா சட்டத்தை அமல்படுத்துவோம் என்பார்கள். இந்த நாடு பாபா சாகேப் அம்பேத்கர் இயற்றிய அரசியல் சாசனத்தால் நடத்தப்பட வேண்டுமா அல்லது இஸ்லாமிய சட்டமான ஷரியத் மூலம் நடத்தப்பட வேண்டுமா என்று நீங்களே சொல்லுங்கள்?" என்று மக்களிடம் அவர் கேள்வி எழுப்பினார்.

"காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் 'வியாக்திகாட் கானூன்' எனப்படும் தனிப்பட்ட சட்டங்களை அமல்படுத்துவோம் என்கிறது. அதாவது பிரதமர் மோடி முத்தலாக் நடைமுறையை நிறுத்தியதால், ஷரியா சட்டம் மூலமாக அதனை மீண்டும் அமல்படுத்தப்படும் என்கிறார்கள். மேலும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மக்கள் சொத்துக்களை எடுத்து பங்கிடுவோம் என்று கூறுகிறது. உங்கள் சொத்துக்களை காங்கிரஸ் கட்சி சூறையாட அனுமதிக்கப் போகிறீர்களா?

யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்

மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, ​​நாட்டின் வளங்களில் முஸ்லீம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று கூறியிருந்தார். அப்படியானால் நமது தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், ஏழைகள், விவசாயிகள் எங்கே போவார்கள்? நமது தாய்மார்களும் சகோதரிகளின் சொத்துக்கள் என்னாகும்?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார் யோகி ஆதித்யநாத்.

மோடி ஆட்சியில் இந்தியாவில் தீவிரவாதம் முடிவுக்கு வந்துவிட்டது என்றும் யோகி பெருமிதம் தெரிவித்தார். "10 ஆண்டுகளுக்கு முன்னர் நாட்டு மக்கள் மத்தியில் அச்சம் அதிகரித்து இருந்தது. 2014-க்குப் பிறகு, பயங்கரவாதம் கட்டுப்படுத்தப்பட்டது. 2019-க்குள், பயங்கரவாதத்தின் ஆணிவேரை அகற்ற, ஜம்மு காஷ்மீரின் 370-வது பிரிவை பிரதமர் மோடி நீக்கினார். இன்று இந்தியாவில் பயங்கரவாதம் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்திய எல்லையில் எங்காவது பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்டால்கூட தங்களுக்கு அதில் எந்த தொடர்பும் இல்லையென பாகிஸ்தான் அலறுகிறது” என்று ஆதித்யநாத் கூறினார்.

இதையும் வாசிக்கலாமே...


அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்... அகவிலைப்படி 25% அதிரடியாக உயர்வு!

இந்து கோயில் கட்டியதால் தான் துபாய் வெள்ளத்தில் மிதக்கிறது... பாகிஸ்தானியர் சர்ச்சை பேச்சு!

கள்ளத்துப்பாக்கி... ரத்தம் படிந்த கோடாரி... கோடநாடு வழக்கில் அதிமுக பிரமுகருக்கு சிக்கல்!

கும்பகோணத்தில் பரபரப்பு... 10 அடி பள்ளத்தில் சிக்கிய தேர் சக்கரம்... மீட்பு பணிகள் தீவிரம்!

ஷாக்... ஆணவப் படுகொலை செய்யப்பட்ட இளைஞரின் மனைவி தற்கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in