ஆ.ராசாவை முற்றுகையிட்ட பெண்கள்... மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லை என புகார்!

திமுக வேட்பாளர் ஆ.ராசாவை முற்றுகையிட்ட பெண்கள்
திமுக வேட்பாளர் ஆ.ராசாவை முற்றுகையிட்ட பெண்கள்

கோவை அருகே தேர்தல் பிரச்சாரத்தின் போது நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் அ.ராசாவை முற்றுகையிட்ட பெண்கள், ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமை தொகை வரவில்லை என புகார் தெரிவித்ததால் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. நீலகிரி தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.ராசா இன்று காலை முதல் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் அன்னூர் அருகே கெம்ப நாயக்கன்பாளையம் கிராமத்தில் ஆ.ராசாவின் பிரச்சார நிகழ்வையொட்டி அங்கு ஏராளமான பெண்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர்.

பிற்பகலில் கெம்பநாயக்கன்பாளையம் பகுதிக்கு வந்த ஆ.ராசா அங்கு கூடியிருந்தவர்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது பிரச்சாரக் கூட்டத்துக்கு அழைத்து வரப்பட்டிருந்த பெண்கள் சிலர், வேட்பாளர் ஆ‌.ராசாவை முற்றுகையிட்டு, தங்களுக்கு ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமை தொகை கிடைக்கவில்லை என புகார் தெரிவித்தனர்.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் தற்போது எதுவும் செய்ய முடியாது என அவர்களுக்கு பதிலளித்த ஆ.ராசா, தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.

பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற பெண்களில் சிலர்
பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற பெண்களில் சிலர்

முதல்வர் ஸ்டாலினே அனைத்து பெண்களுக்கும் உரிமை தொகை வழங்குவதாக சொல்லிவிட்டார் என்று கூறி அவர் சமாதானப்படுத்தினார். மகளிர் உரிமைத் தொகை கேட்டு பெண்கள் திமுக வேட்பாளர் ஆ.ராசாவை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

இதையும் வாசிக்கலாமே...    

நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது வழக்கு... கொலை மிரட்டல் விடுத்ததாக புகார்!

பரபரப்பு... பாஜக எம்எல்ஏவை கத்தியால் குத்திக் கொல்ல முயற்சி!

அதிர்ச்சி... அருணாச்சலப் பிரதேசத்தின் 30 இடங்களின் பெயரை மாற்றி அறிவித்தது சீனா!

கிளாமர் ஒன்றும் கீழ்த்தரம் இல்லை; கொண்டாட்டம் தான்... மனம் திறந்த தமன்னா!

நடத்தையில் சந்தேகம்... மனைவி, 2 குழந்தைகளைக் கொன்று 3 நாட்களாக சடலங்களுடன் வசித்த வாலிபர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in