இது யார் தவறு?... 8 வருடங்களாக அழியாத மையால் வாக்களிக்க முடியாமல் தவித்த கேரள பெண்மணி!

8 வருடங்களாக அவதியடைந்து வந்த உஷா
8 வருடங்களாக அவதியடைந்து வந்த உஷா

கேரளாவில் மூதாட்டி ஒருவர் 8 வருடங்களுக்கு முன்பு வாக்களித்த போது வைக்கப்பட்ட கருப்பு மை அழியாததால் வாக்களிக்க முடியாமல் தவித்த நிலையில் இந்த மக்களவைத் தேர்தலில் வாக்களித்த சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.

இந்திய தேர்தல்களில் மிக முக்கிய பங்காற்றும் நிகழ்வு விரலில் வைக்கப்படும் கருப்பு மை. ஒரு முறை இவ்வாறு கருப்பு மை வைக்கப்பட்டால், அது சில நாட்கள் தொடங்கி சில வாரங்கள் வரையிலும் அழியாமல் இருக்கும். அது அழியும் காலம் ஒவ்வொரு தனி நபருக்கு ஏற்ப மாறுபடும்.

வாக்களித்ததற்கு அடையாளமாக வைக்கப்படும் கருப்பு மை
வாக்களித்ததற்கு அடையாளமாக வைக்கப்படும் கருப்பு மை

உடலில் சிலருக்கு இருக்கும் இயல்பான மாற்றங்கள் காரணமாக இந்த கால அவகாசம் நிகழ்கிறது. இருப்பினும் பெரும்பாலும் 15 நாட்களுக்கு முதல் ஒரு மாதக் காலத்திற்குள் இந்த மை அழிந்து விடுவது வாடிக்கை. திடீரென ஒரு தொகுதியில் மீண்டும் வாக்குப்பதிவு ஏற்படும் சூழல் ஏற்பட்டால், ஆட்காட்டி விரலுக்கு அடுத்த விரலில் மை வைப்பதை தேர்தல் ஆணையம் வாடிக்கையாக வைத்துள்ளது. ஒருவேளை குறிப்பிட்ட நபர் முன்பு நடைபெற்ற தேர்தலில் வாக்களிக்காமல் மறுவாக்கு பதிவிற்கு வந்திருந்தால், அவருக்கு அடுத்த விரலில் தான் மை வைக்கப்படும்.

கேரளாவில் வாக்களிக்க காத்திருந்த மக்கள்
கேரளாவில் வாக்களிக்க காத்திருந்த மக்கள்

கடந்த 2016-ம் ஆண்டு கேரளாவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின் போது ஷொரனூர் சட்டப்பேரவை தொகுதியைச் சேர்ந்த உஷா என்பவருக்கு தேர்தலில் வாக்களித்ததற்கான அடையாளமாக ஆட்காட்டி விரலில் மை வைக்கப்பட்டது. சில மாதங்கள் மை அழியாமல் இருந்தது.

இந்த நிலையில், பல வருடங்களாகியும் அந்த மை அழியவில்லை. இதனால் அதன் பின்னர் வந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் மற்றும் 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல், உள்ளாட்சி தேர்தல்களில் உஷாவால் வாக்களிக்க முடியவில்லை. வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்களிக்க சென்ற போது, அவர் விரலில் அழியாத மீது இருந்ததால் அவரை வாக்களிக்க அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.

கேரளாவில் வாக்களிக்க காத்திருந்த மக்கள்
கேரளாவில் வாக்களிக்க காத்திருந்த மக்கள்

கையில் சோப்பு, பெயின்ட் கரைக்க பயன்படுத்தப்படும் தின்னர், மண்ணெண்ணெய், பெட்ரோல், டீசல் என ஏராளமான வகை பொருட்களைப் பயன்படுத்தி அழிக்க முயன்ற போதும் அந்த மை கரை அழியவே இல்லை. இந்த நிலையில் தற்போதைய மக்களவைத் தேர்தலைப் புறக்கணித்து விடலாம் என உஷா முடிவு செய்திருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இதைப் பார்த்த தேர்தல் ஆணைய அதிகாரிகள், சம்பந்தப்பட்ட செய்தி வெளியாகியுள்ள நாளிதழுடன் வாக்குச்சாவடி மையத்திற்கு வந்தால் அவர் வாக்களிக்க அனுமதிக்கப்படும் என தெரிவித்திருந்தனர். கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நேற்று நடைபெற்றது.

விரலில் வைக்கப்படும் மை
விரலில் வைக்கப்படும் மை

ஷொரனூர் தொகுதியை உள்ளடக்கிய பாலக்காடு மக்களவைத் தொகுதியில் உள்ள குருவாயூரப்பன் நகரில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு வாக்களிப்பதற்காக உஷா வருகை தந்தார். அவரது கையில் அழியாத மை இருந்ததை கண்டு அதிகாரிகள் துணுக்குற்றனர். ஆனால் அப்போது பணியில் இருந்த தேர்தல் அலுவலர் திவ்யா என்பவர், இந்த செய்தி குறித்து அறிந்திருந்தார். இதனால் உஷாவை வாக்களிக்க திவ்யா அனுமதி அளித்தார். சுமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு 62 வயதான உஷா தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். ஆனாலும் ஒரு சோகம் மிச்சம் இருந்தது.

’ஐயம் வெரி ஹேப்பி’ - 8 ஆண்டுக்குப்பின் வாக்களித்த மகிழ்ச்சியில் உஷா
’ஐயம் வெரி ஹேப்பி’ - 8 ஆண்டுக்குப்பின் வாக்களித்த மகிழ்ச்சியில் உஷா

தன்னுடைய ஆட்காட்டி விரலில் மை இருப்பதால் தான் வாக்களித்ததற்கு அடையாளமாக தனது நடுவிரலில் மை வைக்க வேண்டும் என அவர் தேர்தல் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தார். ஆனால் தேர்தல் விதிகளின்படி அதற்கு வாய்ப்பு இல்லை என தேர்தல் அலுவலர்கள் மறுத்துவிட்டனர்.

இதனால் 8 ஆண்டுகளுக்கு முன்பு வாக்களித்த அடையாளத்தோடு அவர் இந்த முறையும் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேறினார். பொதுவாக இது போன்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு இல்லை என்றாலும் சிலருக்கு நகத்தின் அடியில் உள்ள கரை காரணமாக இது போன்று மை அழியாமல் சுவடாக ஏற்பட்டு விட வாய்ப்பு இருப்பதாக தோல் மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

ஹாட்ரிக் வெற்றி... உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் இந்தியாவுக்கு மூன்று தங்கப் பதக்கங்கள்!

700 ஹெக்டேர் நாசம்; நைனிடால் நகரை நெருங்கியது காட்டுத் தீ: இந்திய ராணுவம் விரைந்தது!

ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுக்கி 8 வயது சிறுமி மரணம்... வீட்டில் தனியாக இருந்தபோது விபரீதம்

ஆமாம்... தமிழ் சினிமாவில் கட்டப்பஞ்சாயத்து இருக்கிறது... இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேட்டி!

தனியார் கம்பெனியின் ஆசிட் தொட்டியில் விழுந்து தொழிலாளி மரணம்... சென்னை அருகே சோகம்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in