சொத்து மதிப்பு ரூ.5,785 கோடி; கவனம் ஈர்த்த தெலுங்கு தேசம் வேட்பாளர்!

குண்டூர் தொகுதி தெலுங்கு தேசம் வேட்பாளர் சந்திரசேகர்
குண்டூர் தொகுதி தெலுங்கு தேசம் வேட்பாளர் சந்திரசேகர்

ஆந்திர மாநிலம், குண்டூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் பி.சந்திரசேகர் தனக்கு ரூ.5,785 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.

ஆந்திர பிரதேச மாநிலம், குண்டூர் மக்களவைத் தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் போட்டியிடுபவர் பி. சந்திர சேகர். இவர் வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தனது குடும்பத்தின் அசையும் மற்றும் அசையா சொத்துகள் ரூ.5,785 கோடி என குறிப்பிட்டுள்ளது தேசிய அளவில் கவனம் ஈர்த்துள்ளது.

 சந்திரசேகர்
சந்திரசேகர்

சந்திரசேகரின் பிரமாண பத்திர தகவல் படி அவரது தனிப்பட்ட சொத்து மதிப்பு ரூ.2,448.72 கோடி. அவரது மனைவி ஸ்ரீரத்னா கொனேருவின் சொத்து மதிப்பு ரூ.2,343.78 கோடி. இது தவிர இவர்களது குழந்தைகளின் பெயரில் சுமார் ரூ.1,000 கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், சந்திர சேகரின் குடும்பத்துக்கு, அமெரிக்காவின் ஜே.பி.மோர்கன் சேஸ் வங்கியில் ரூ.1,138 கோடி கடன் உள்ளது.

ஆந்திரப் பிரதேசத்தின் புரிபாலெம் கிராமத்தில் துவங்கி, ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம்-சினாய் மருத்துவமனையில் மருத்துவ பேராசிரியாக பணியாற்றுவது வரை சந்திர சேகரின் பயணம் அசாத்தியமானது. இதுதவிர 'யு வேர்ல்டு' என்ற ஆன்லைன் கற்றல் தளத்தையும் நடத்தி வருகிறார். டாக்டர், தொழில்முனைவோர், அரசியல்வாதி என பன்முகத்தன்மை கொண்ட சந்திரசேகர், கடந்த 1999ம் ஆண்டில் விஜயவாடாவில் உள்ள என்.டி.ஆர். சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ் பட்டம் பெற்றார்.

தேர்தல் பிரச்சாரத்தில்  சந்திரசேகர்
தேர்தல் பிரச்சாரத்தில் சந்திரசேகர்

பின்னர் 2005ம் ஆண்டில் பென்சில்வேனியாவின் டேன்வில்லில் உள்ள கீசிங்கர் மருத்துவ மையத்தில் எம்.டி. (உள் மருத்துவம்) பயின்றார். மக்கள் சேவையில் ஆர்வம் உள்ள சந்திரசேகர், கடந்த 2010ம் ஆண்டு முதல் தெலுங்கு தேசம் கட்சியின் என்ஆர்ஐ (வெளிநாடு வாழ் இந்தியர்) பிரிவின் சார்பில் கட்சியின் பல நலத்திட்டங்களுக்கு ஆதரவளித்து வருகிறார்.

இந்தத் தேர்தலில் குண்டூர் மக்களவைத் தொகுதியில் சந்திரசேகரை எதிர்த்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் வெங்கட ரோசய்யா போட்டியிடுகிறார்.

இதையும் வாசிக்கலாமே...

அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்... அகவிலைப்படி 25% அதிரடியாக உயர்வு!

இந்து கோயில் கட்டியதால் தான் துபாய் வெள்ளத்தில் மிதக்கிறது... பாகிஸ்தானியர் சர்ச்சை பேச்சு!

கள்ளத்துப்பாக்கி... ரத்தம் படிந்த கோடாரி... கோடநாடு வழக்கில் அதிமுக பிரமுகருக்கு சிக்கல்!

கும்பகோணத்தில் பரபரப்பு... 10 அடி பள்ளத்தில் சிக்கிய தேர் சக்கரம்... மீட்பு பணிகள் தீவிரம்!

ஷாக்... ஆணவப் படுகொலை செய்யப்பட்ட இளைஞரின் மனைவி தற்கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in