கும்பகர்ண தூக்கத்தில் இருக்கும் தேர்தல் ஆணையம்... ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் செல்வப்பெருந்தகை காட்டம்!

செல்வப்பெருந்தகை
செல்வப்பெருந்தகை

”தேர்தல் ஆணையத்தை நம்பி பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் நிற்பதால், நடவடிக்கை எதுவும் இருக்காது” என்று தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, “ 4 கோடி ரூபாய் பிடிபட்ட வழக்கில் தேர்தல் ஆணையம் கும்பகர்ண தூக்கத்திலிருந்து விழித்துக் கொள்ளுமா?” என கேள்வி எழுப்பி உள்ளார்.

கேரளாவில் நடைபெறும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கடந்த சில நாட்களாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். இன்று பிரச்சார சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு அவர் விமானம் மூலம் சென்னை வருகை தந்தார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி இந்த முறை ஐந்தரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். வயநாடு தொகுதியில் இருந்து பாசிசத்தை ஒழிக்க தீப்பொறி கிளம்பி இருக்கிறது. தோல்வி பயத்தில் பிரதமர் நரேந்திர மோடி தகுதியை மீறி மிகவும் கீழ்த்தரமாக கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.” என்றார்.

செல்வப்பெருந்தகை
செல்வப்பெருந்தகை

மேலும், ”பாஜக கூட்டணி தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை சந்திக்க இருக்கிறது. 100 இடங்களுக்கு மேல் கூட பாஜக பெறாது என வட மாநில பத்திரிகையாளர்கள் சொல்கின்றனர். அந்த தோல்வி பயத்தில் கலவரத்தை ஏற்படுத்தவும், மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தவும், பிரதமர் மோடி இப்படிப்பட்ட நாகரிகமற்ற பேச்சுக்களை பேசி வருகிறார்.

மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் மாநிலங்களவை உறுப்பினர்களாக இருக்கிறார்கள். தோல்வி பயத்தில் தான் அவர்களும் மக்களை சந்திக்காமல் மாநிலங்களவைக்குச் சென்றார்கலா என விளக்கம் அளிக்க வேண்டும்”என்றார்.

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

தொடர்ந்து பேசிய அவர், ”இந்தியா கூட்டணி மக்களை நம்பி தேர்தலில் நிற்கிறது. ஆனால் பாஜக, அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறை, தேர்தல் ஆணையம் ஆகியவற்றை நம்பி தேர்தலில் நிற்கிறது. இதனால் பிரதமர் நரேந்திர மோடி என்ன பேசினாலும் அவர் மீது நடவடிக்கை இருக்காது. திருநெல்வேலி பாஜக வேட்பாளருக்காக எடுத்துச் செல்லப்பட்ட 4 கோடி ரூபாய் பிடிக்கப்பட்டது. இதுவரை அமலாக்கத்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கும்பகர்ண தூக்கத்தில் இருக்கும் மத்திய புலனாய்வு அமைப்புகளும், தேர்தல் ஆணையமும் எப்போது விழிக்கும் என தெரியவில்லை.” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...


'ஜெய் ஸ்ரீராம்' கோஷமிட்ட இளைஞர் மீது திடீர் தாக்குதல்... கர்நாடகாவில் அடுத்த சம்பவம்!

அரசுப்பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து... ஒருவர் உயிரிழப்பு; 25 பேர் காயம்!

அவன் இல்லாத வாழ்க்கை எனக்கு வேண்டாம்... ஆணவக் கொலை செய்யப்பட்டவரின் மனைவி எழுதிய கடிதம் சிக்கியது!

தேர்தல் முன்விரோதத்தில் இரட்டை கொலை... 20 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு!

சென்னையில் பரபரப்பு... ரூ.15 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in