10 ஆண்டு ஆட்சி வெறும் ‘டிரைலர்’; இன்னும் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது... பிரதமர் மோடி பளீர்!

பீகாரில் பிரதமர் மோடி பிரச்சாரம்
பீகாரில் பிரதமர் மோடி பிரச்சாரம்

கடந்த 10 ஆண்டுகளில் தனது அரசு செய்தவை ஒரு 'டிரைலர்' மட்டுமே என்றும், என்டிஏ கூட்டணி 3வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டால் இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது என்றும் பீகாரில் பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொண்டார்.

பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் பிரதமர் மோடி பிரச்சாரம்
பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் பிரதமர் மோடி பிரச்சாரம்

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) பீகாரில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக, லோக் ஜனசக்தி கட்சி உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. அங்குள்ள ஜமுய் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

கடந்த 10 ஆண்டுகளில் பாஜக ஆட்சியில் செய்யப்பட்டவை அனைத்தும் வெறும் டிரெய்லர் தான். இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது. நாட்டை முன்னேற்றுவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, கோதுமைப் பொருட்களுக்கு கூட போராடும் சிறிய நாடுகளின் பயங்கரவாதிகள், இஷ்டத்துக்குத் தாக்குவர்.

ஆனால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில், இந்தியா பதிலடி கொடுக்கத் துவங்கியுள்ளது. ரயில்வேயில் ஏழைகளுக்கு வேலை வழங்குகிறோம் என்ற பெயரில் நிலங்களை ஆக்கிரமித்தவர்களால் (லாலுபிரசாத் யாதவை குறிப்பிடுகிறார்) பீகார் மக்களுக்கு எந்த நன்மையும் செய்ய முடியாது.

ஒருபுறம் புதிய தொழிற்சாலைகளை அமைப்பது பற்றி பேசும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு உள்ளது. மறுபுறம், கடத்தல் தொழில் மட்டுமே புகழ் பெற்றதாகக் கூறும் நபர்கள் உள்ளனர். ஒருபுறம் சூரிய மின்சக்தி மற்றும் எல்இடி விளக்குகள் பற்றி பேசும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு உள்ளது. மறுபுறம் எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ள திமிர்பிடித்த தலைவர்கள், பீகாரை மீண்டும் விளக்கு யுகத்துக்கு கொண்டு செல்ல விரும்புகிறார்கள்.

பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமருடன், முதல்வர் நிதிஷ்குமார்
பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமருடன், முதல்வர் நிதிஷ்குமார்

காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) ஆகிய இரண்டு கட்சிகளும் பீகார் மற்றும் பீகாரியின் பெருமையை அவமதித்தன. அவர்கள் கர்பூரி தாக்கூரை அவமதித்தனர். சமீபத்தில், நமது அரசு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னாவை கர்பூரி தாக்கூருக்கு வழங்கி பெருமைப்படுத்தியது. ஆனால் அதனை கூட அவர்கள் (காங்கிரஸ், ஆர்ஜேடி) ஏளனம் செய்தனர்.” இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

இதையும் வாசிக்கலாமே...   

கார் விபத்தில் சிக்கிய அஜித்... ’விடாமுயற்சி’க்காக உயிரை பணயம் வைத்து ரிஸ்க்; வைரல் வீடியோ!

சமுதாயத்தில் 60 சதவீதம் பேர் கெட்டவர்கள் தான்... இயக்குநர் ஹரி பரபர பேச்சு!

ஜஸ்ட் மிஸ்... பிரச்சாரத்தின் போது மாட்டுவண்டியில் இருந்து தவறி விழுந்த தேமுதிக வேட்பாளர்!

விஷத்தை சாக்லேட்டில் நனைத்து சாப்பிட்ட தம்பதி.. காருக்குள் இறந்து கிடந்த மனைவி!

மனைவி டார்ச்சர் தாங்கல... விவாகரத்து கேட்டு நீதிமன்றம் சென்ற மாஸ்டர் செஃப் பிரபலம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in