ஜஸ்ட் மிஸ்... பிரச்சாரத்தின் போது மாட்டுவண்டியில் இருந்து தவறி விழுந்த தேமுதிக வேட்பாளர்!

பிரச்சாரத்தில் மாட்டுவண்டியில் இருந்து தவறி விழுந்த தஞ்சை தேமுதிக வேட்பாளர் சிவனேசன்
பிரச்சாரத்தில் மாட்டுவண்டியில் இருந்து தவறி விழுந்த தஞ்சை தேமுதிக வேட்பாளர் சிவனேசன்

தஞ்சாவூர் தொகுதியில் இரட்டை மாட்டு வண்டியில் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்த தேமுதிக வேட்பாளர் சிவனேசன் திடீரென மாட்டு வண்டியில் இருந்து தவறி விழுந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மக்களவைத் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தஞ்சை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் சிவனேசன் திருவையாறு சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட மாத்தூர், மாத்தூர் கிழக்கு, மேற்கு நல்லிச்சேரி உள்ளிட்ட கிராமங்களில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

சிவனேசனுக்கு அருள்வாக்குச் சொன்ன பெண்மணி...
சிவனேசனுக்கு அருள்வாக்குச் சொன்ன பெண்மணி...

மாத்தூர் காளியம்மன் கோயிலில் வழிபட்ட வேட்பாளர் சிவனேசனுக்கு கோயில் நிர்வாகத்தினர் பூரண கும்ப மரியாதையுடன் பரிவட்டம் கட்டி வரவேற்றனர். வேட்பாளர் சிவனேசனுக்கு பெண்கள் பூக்கள் தூவியும் ஆரத்தி எடுத்தும் நடனமாடியும் வரவேற்பளித்தனர். அப்போது கூட்டத்தில் மஞ்சள் புடவை கட்டி இருந்த பெண் ஒருவருக்கு திடீரென சாமி அருள் வந்ததால் அவர் குறி சொல்லத் துவங்கினார். யோசிக்காமல் அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார் சிவனேசன்.

மாட்டுவண்டியில் சிவனேசன் வாக்குச் சேகரிப்பு...
மாட்டுவண்டியில் சிவனேசன் வாக்குச் சேகரிப்பு...

சிவனேசனின் பிரச்சாரத்துக்காக தேமுதிகவினர் மாட்டு வண்டி ஒன்றை ஏற்பாடு செய்ந்திருந்தனர். சிவனேசன் மாட்டு வண்டியை சற்று தூரம் ஓட்டிச் சென்று பொதுமக்களிடம் வாக்குச் சேகரித்தார். இறுதியாக அவர் மாட்டு வண்டியின் மீது நின்றபடி பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார். அப்போது திடீரென மாடு மிரண்டதால் வண்டியில் இருந்து சிவனேசன் தவறி கீழே விழுந்தார். நல்லவேளை, அருகில் இருந்த தொண்டர்கள் அவரை பிடித்துக்கொண்டதால் சேதாரமின்றி தப்பினார். இந்த சம்பவத்தால் அங்கே சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இதையும் வாசிக்கலாமே...   

குட்நியூஸ்... இந்திய கடற்படையில் 4,108 வேலைவாய்ப்புகள்: ஏப்ரல் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!

அதிர்ச்சி: ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தை; மீட்பு பணி தீவிரம்!

சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் அச்சம்... மயிலாடுதுறையில் 7 பள்ளிகளுக்கு விடுமுறை!

வங்கிக் கணக்கை முடக்குவதாக பாஜக மிரட்டியது... பிரேமலதா பகீர் குற்றச்சாட்டு!

தம்பி அண்ணாமலை, மோதிப் பார்ப்போமா?... சவால் விட்ட சீமான்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in