இந்தியப் பயணத்தை ஒத்திவைத்த எலான் மஸ்க், சீனா சென்றது எதைக் காட்டுகிறது? - ப.சிதம்பரம் கேள்வி!

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்

இந்தியப் பயணத்தை ஒத்திவைத்து எலான் மஸ்க், சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டது எதைக் காட்டுகிறது? பிரதமர் மோடியைச் சந்திக்காமல் சீனப் பிரதமரைச் சந்தித்தது எதைக் காட்டுகிறது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில், 'டெஸ்லா கார் கம்பெனியின் அதிபர் எலான் மஸ்க் இந்தியாவுக்கு வருவதற்கு நாள் குறித்திருந்தார். பிரதமர் மோடியுடன் பேசிய பிறகு இந்தியாவில் கார் தயாரிக்கும் பெரிய தொழிற்சாலையை அமைக்கும் முடிவை மஸ்க் அறிவிப்பார் என்று அரசு எதிர்பார்த்தது கடந்த வாரம் தன் இந்தியா பயணத்தை நாள் குறிப்பிடாமல் மஸ்க் ஒத்திவைத்தார். டெஸ்லா கம்பெனியின் "அவசர வேலைகளால்" பயணம் ஒத்தி வைக்கப்பட்டது என்று காரணம் சொல்லப்பட்டது

எலான் மஸ்க் - எக்ஸ் தளம்
எலான் மஸ்க் - எக்ஸ் தளம்

ஆனால், நேற்று மஸ்க் சீனாவுக்குச் சென்றார், சீனப் பிரதமருடன் பேச்சு வார்த்தை நடத்தினார். டெஸ்லா கம்பெனியின் நவீன ஓட்டுநர் இல்லாத காரை சீனாவில் தயாரிப்பது பற்றி இருவரும் பேசினார்கள் என்று அறிவிக்கப்பட்டது. சீனாவில் மிகப் பெரிய கார் தொழிற்சாலையை மஸ்க் அமைப்பார் என்று நம்பப்படுகிறது.

இந்தியப் பயணத்தை ஒத்திவைத்து மஸ்க், சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டது எதைக் காட்டுகிறது? பிரதமர் மோடியைச் சந்திக்காமல் சீனப் பிரதமரைச் சந்தித்தது எதைக் காட்டுகிறது? இவை சிந்திக்க வேண்டிய விஷயங்கள் அல்லவா?' என்று அவர் தெரிவித்துள்ளார்

எலான் மஸ்க்
எலான் மஸ்க்

டெஸ்லா மின்சார வாகன நிறுவனத்தின் தலைவரும், எக்ஸ் நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க், கடந்த ஏப்ரல் 21, 22 ஆகிய தேதிகளில் இந்தியா வருவதாக தகவல் வெளியானது, இந்த பயணத்தின்போது பிரதமர் மோடியை அவர் சந்திக்க திட்டமிட்டிருந்தார். அதன் பிறகு, திடீரென எலான் மஸ்க் தனது இந்திய பயணத்தை ஒத்திவைத்தார். ஆனால் அவர் ஞாயிற்றுக்கிழமை சீனாவுக்கு திடீா் பயணம் மேற்கொண்டு அந்நாட்டு பிரதமரை சந்தித்துப் பேசியுள்ளார். எலான் மஸ்க் இந்தியப் பயணத்தை ரத்து செய்த சம்பவம் விமர்சனங்களை உருவாக்கியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

கடந்த 6 மாதங்களில் 31 சதவீத மசாலாக்கள் நிராகரிப்பு; இந்தியாவின் மசாலாக்களை ஆராயும் அமெரிக்கா!

நடிகர் பிரகாஷ்ராஜ்க்கு 'அம்பேத்கர் சுடர் விருது'... விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு!

பகீர்... ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணியைக் காப்பாற்றிய பெண் போலீஸ்: பதற வைக்கும் வீடியோ வைரல்!

உளவுத் துறை எச்சரிக்கை: நாடு முழுவதும் அமலாக்கத் துறை அலுவலகங்களுக்கும் சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு!

முதல் மதிப்பெண் எடுக்காமலேயே இருந்திருக்கலாம்... உருவ கேலிக்குள்ளான மாணவி வேதனை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in